Breaking News :

Sunday, October 06
.

சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்


சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (16.04.2024) நடந்தது.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி, பராசக்தி கோஷத்ததுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 4 ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வலம் வந்த திருத்தேரில் மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி தன்னை நாடி வந்த தன் பக்தர்களுக்கு கருணை முகத்துடன் அருள்பாலித்தார். காலை 11.10 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் பகல் 2.20 மணிக்கு நிலைக்கு வந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல கிலோ மீட்டர் துாரம் தண்ணீர்பந்தல்கள் அமைத்து நீர், மோர், பாகனம், பழரசங்கள், தர்பூசணி பழங்கள், இளநீர் வழங்கினர். மேலும், நுாற்றுக்கணக்கான இடங்களில் பந்தல் அமைத்தும், வேன்களில் வைத்தும் அன்னதானம் நடந்தது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.