Breaking News :

Sunday, October 27
.

கஷ்டங்கள் தீர்க்கும் வளர்பிறை அஷ்டமி


கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு சொல் உண்டு. இந்தக் கலியுகத்தில், காலபைரவர் வழிபாடு செய்யச் செய்ய... எல்லா இடர்பாடுகளும் விலகும் என்பது ஐதீகம்.

சிவனின் அம்சமான பைரவரை வழிபடுவ தற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள்.  வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால்  நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். அஷ்டமி தினம் இன்று பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்ய சிறந்த தினமா கும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.

வளர்பிறை அஷ்டமி தினம் பைரவருக்கு விரதம் இருந்து,  பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்ப தும், வணங்குவது சிறப்பாகும்.

வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப் பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரி களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புக ள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன் றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பண வரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும்.

உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

சிவாலயம் செல்லுங்கள். காலபைரவருக் கு செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வதும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்வதும் இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது. முடிந்தால், பைரவருக்கு வடைமாலை சார்த்தலாம்.

எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் தலைதெறி க்க ஓடுவார்கள். இன்னல்கள் யாவும் காணாமல் போகும். கவலைகளையெல் லாம் நீங்கள் மறந்தேபோவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் பைரவர் பேரருள் புரிந்து துணை நிற்பார்.

அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலனைத் தரும். அஷ்டமியில் விரத ம் இருப்பவர்கள் உடல் ஊனமில்லாமலும், செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் "சிவபுராணம்" கூறுகிறது.

21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். அஷ்டமி திதி நாளில், பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது வேண்டிய தை யெல்லாம் தந்தருளும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்க ளை நீக்கி லாபம் பெரு க்கித் தருவார். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது வழக்கில் இருந்த சிக்கல்களெ ல்லாம் நீங்கி சொத்துப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்படும் என்பது ஐதீகம்.

பைரவாஷ்டகம் பாராயணம் செய்வதும் செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவதும் மகத்துவம் வாய்ந்தது. மேலும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்தா ருக்கும் ஆதரவற்றோ ருக்கும் பக்தர்களுக் கும் விநியோகம் செய்யுங்கள்.

முக்கியமாக, தெருநாய்களுக்கு உணவோ பிஸ்கட்டோ கொடுப் பது கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி. தீய சக்திகள் யாவும் ஓடிவிடும். கஷ்டங்களும் கடன் தொல்லையும் நீங்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஸ்ரீ கால பைரவர் திருவடிகளே துணை...
 நேசமுடன் விஜயராகவன்.....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.