Breaking News :

Sunday, October 27
.

அங்க பிரதட்சணம் ஏன்?


தலை, நெற்றி, கரங்கள், தோள் பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் போன்ற அவய அங்கங்கள் பூமியில் படும்படியாக வணங்கி வழிபடுவதே "அங்க பிரதட்சணம்" என்று அழைக்கப்படுகிறது.

இதை "சாஷ்டாங்க நமஸ்காரம்" என்றும் அழைக்கப்படுகிறது.

எனக்கு சகலமும் நீயே என்று இறைவனை நோக்கி சர்வ அங்கமும் படும்படி கோயில் பிரகாரத்தைச் சுற்றி வருவதே அங்கபிரதட்சணம் ஆகும். எல்லா ஆலயங்களிலுமே அங்கபிரதட்சணம் செய்யலாம்.

அங்க பிரதட்சணம் செய்வதற்கு முன்பு உடலை தூய்மையாக்கி குளித்து முடித்து ஈரத்துணியுடன் பலி பீடம் முன்பு வர வேண்டும்.

பிறகு கிழக்கு நோக்கி தரையில் உருண்டவாறு மேற்கு பக்கமாக உருண்டு வந்து பலி பீடத்தில் வந்து வேண்டுதலை முடிக்க வேண்டும்.

பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி, பிரதட்சிணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும்.

இவ்வாறு பிரதட்சிணம் செய்து வணங்குவது என்பது "இயற்கையோடு இணைந்தது என்று சாஸ்திரம் சொல்லுகிறது."

நாம் வாழுகின்ற பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போதும் சரி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் போதும் சரி இடமிருந்து வலமாகவே சுற்றுகிறது.

இயற்கையின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் நாமும் இடமிருந்து வலமாக சுற்றி வந்து தெய்வங்களை வணங்குகிறோம்.

நம் வாழ்க்கை சக்கரம் சுழல்வதற்கு இயற்கை என்ற ஒரு புள்ளி வேண்டும். அதை மையமாக வைத்தே நம் வாழ்க்கை இயங்குகிறது.

நம் தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் இயற்கையே என்பதை உணர்த்தத்தான், இயற்கையோடு ஒன்றிய கடவுளை மையமாக வைத்து ஆலயங்களில் சந்நிதியை சுற்றி வருகிறோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.