நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை - அதிரடி காட்டிய ஐகோர்ட்!.
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள்
நாகதோஷம் பித்ருதோஷம் செவ்வாய் தோஷம் என தோஷங்கள் பலவகை உண்டு. நம் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளும் தன்மை கொண்டவை இவை.ஒவ்வொரு தோஷத்துக்கும் பரிகாரங்கள் உண்டு.குறிப்பிட்ட தெய்வங்கள் தோஷங்களை நீக்கும் தன்மையுடன் விளங்குகின்றன. விநாயகரோ அத்தனை தோஷங்களையும் நீக்கும் வல்லமை கொண்டவராகத் திகழ்கிறார்.
மனிதர்கள் மட்டும் அல்ல தேவர்களையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைக்கும் சனிஸ்வரன் கூட விநாயகரை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு பராக்கிரமம் நிறைந்தவர் விநாயகர் பரிகாரமூர்த்தியாகவே விளங்குகிறார் .எளியவர் தெய்வமான விநாயகருக்கு பொன்னும் பொருளும் படைத்து ஆடம்பரமாக வழிபடவேண்டிய அவசியம் இல்லை.
மிக எளிமையாக எல்லா இடத்திலும் கிடைக்கும் அருகம்புல்லும் எருக்கம்பூவும் அணிவித்து வணங்கினாலே போதுமானது.தோஷங்களால் சுபகாரியங்கள் தள்ளிபோகிறவரகள் கூட விநாயகரைவழிபட விரைவில் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்..