விளாங்குளம் சிவன் கோயில்
பேராவூரணிலிருந்து சேதுபாவாசத்திரம் செந்தலைவயல் வந்து 2 கிமி மேற்கில் சென்றால் 20 கி.மீ. தொலைவிள் விளாங்குளம் அடையலாம். இங்கு ஒரு பெரிய சிவாலயம் உள்ளது.
“பூச பதன் நேசம் தரும்” என்பது முதுமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். சனி பகவான் ஊனம் உள்ளவர் அதனால் மெதுவாக செல்லும் பழக்கம் உள்ளவர் என்பதால் அவரை சனைச்சரன் என அழைத்தனர். இதற்கு நிவாரணம் தேடி, பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமர வேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்தது, அதில் அவர் நீராடி இறைவனை வணங்க, இறைவன் அவருக்கு திருமண பாக்கியம் தந்தார். அவர் விழுந்தநாள் திருதியை, பூசம், சனிக்கிழமை சேர்ந்த நன்னாளாக இருந்தது.
விளாமரம் இடறியதாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளாங்குளம் ஆனது.
சிவனை வழிபட்டு மந்தா ஜேஷ்டா தேவியரை மணந்தார். இத்தலத்தில் தேவியருடன் அமர்ந்து ஆதிபிரஹத் சனிபகவான் எனும் பெயரில் அருள் புரிந்து வருகின்றார். பூசமருங்கர், சனிப்பாணி சித்தர்கள் வழிபட்ட தலம். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சனிக்கிழமை பிறந்தவர்களும் வழிபட வேண்டிய தலம்.
பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில் தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று
இறைவன்: அட்சயபுரீஸ்வரர், ஸ்ரீவிளாமுடைய தம்பிரான்
இறைவி: அபிவிருத்திநாயகி
கிழக்கு நோக்கிய சிவன்கோயில், கோயிலின் நேர் எதிரில் விஜயவினாயகர் எனும் சிறு விநாயகர் கோயில், அதன் பின்புறம் பெரிய குளம் ஒன்றுள்ளது. கோயிலின் தெற்கில் ஒரு பெரிய குளமும் உள்ளது.
சுற்று மதில் சுவருடன் கூடிய திருக்கோயில் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது அதன் வழி உள்ளே சென்றவுடன் அகன்ற முகப்பு மண்டபம் அதன் வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. பெரிய உருண்டை தூண்களுடன் உயர்ந்த விமான கட்டுமானம் கொண்டுள்ளது. இதை பார்க்கும் போது நாயக்கர் கால திருப்பணிகளும் உள்ளதாக அறிகிறோம். இடதுபுறம் பெரிய வன்னி மரம் தழைத்து நிற்கிறது. வலதுபுறம் சிறப்புக்குரிய சன்னதியாக கருவறை முகப்பு மண்டபம் என மங்கள சனீஸ்வரர் தெற்கு நோக்கி உள்ளார்.
இறைவன் கருவறை அற்புதமான சோழகருங்கல் கட்டுமானம் கொண்டு விளங்குகிறது, இடைநாழி நீண்ட அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது இதில் அம்பிகையின் கருங்கல் கருவறை கட்டுமானமும் நடராஜர் சன்னதி ஒன்றும் சேர்கிறது. கல்வெட்டு ஒன்று வாயில் அருகே உள்ளது.
கருவறையில் இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர் தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் சன்னதி பெரிய அளவில் உள்ளது. பிரகார சிற்றாலயங்கள் விநாயகர் முருகன் இருவருக்கும் உள்ளது. வடகிழக்கில் பைரவர் சூரியன் இருவருக்கும் சன்னதி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம்,