ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள ஊத்துக்காட்டில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது.
இங்கு அம்பாள் எல்லையம்மன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.
வேப்பிலை அணிந்தால் வேதனைகளை தீர்க்கும் ஊத்துக்காடு எல்லையம்மன்
இந்த அம்பாளை வேப்பிலை ஆடை அணிந்து அம்மனை வலம் வந்து அம்மனை வழிப்பட்டால் திருமணம் விரைவில் திருமணம் கைகூடும் என்பது, தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை, எல்லையம்மன் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள்.
இடது மேல் கையில் சூலத்துடனும் வலது மேல் கையில் உடுக்கையுடனும் மற்ற இரு கைகளில் அபயம் மற்றும் வரத கரத்துடனும் வலது காலை மடித்து இடது காலினை மகிஷன் தலை மீது வைத்தபடியும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.
கருவறைக்கு முன்புறம் துவாரபாலகர்களும், ஏழரை அடி உயரம் உள்ள காளிகாம்பாளும் உள்ளனர்.
கருவறையின் வெளிப்புறச் சுவரில் வாராகி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, துர்கை, ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகியோர் அருள்புரிகின்றனர்.
மேலும் காலபைரவர் சந்நிதி, நவகிரகங்களின் சந்நிதி, சிவன், பார்வதி மற்றும் விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
சித்திரை மூல நட்சத்திரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் அதை பத்து நாட்கள் பிரம்மோற்ஸவ விழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
அதில் ஒன்றாக தெப்போற்ஸவம் நடக்கிறது. இங்கே அம்மனுக்குப் படைத்த உப்பில்லாத வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.
இந்தக் கோயில் திருக்குளத்தில் நீராடி வேப்பிலையை உடலில் அணிந்து பொங்கல் வைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும்.
தீராத நோய் தீரும். தொழில் வளர்ச்சியடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயில் அருகில் உள்ள அலரி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் பாக்கியம் கிடைக்கும்.
அமைவிடம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில் இருந்து ஊத்துகாடுக்கு பஸ்வசதி உள்ளது.