ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில், சோழபுரம்

sri-bairaveshwar-temple-cholapuram
ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில், சோழபுரம்

பைரவ மூர்த்திகளுக்கு எல்லாம்  மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்

கும்பகோணம் அருகே சோழபுரம் உள்ளது. பழைய பெயர் பைரவபுரம் .

இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும். 

பைரவ மூர்த்திகளுக்கு எல்லாம் ஈஸ்வர 
மூர்த்தியாக பைரவேஸ்வரராக சிவ பெருமான் தோன்றிய தலம்.
அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி.‌ ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும்.
இத் திருத்தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், 

இக்கோவிலில் அஷ்ட பைரவர் சிலைகள் உள்ளது ,சிவனை வழிபடுவது அஷ்ட நாக சிலை உள்ளது.
இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது ,

இராமாயண காலத்தில் இராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், 
நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் .
இத்தல ஸ்ரீ பைரவேஷ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்,
இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .

குளிகன் பிறந்த அந்த நேரமே இராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து இராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது 

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ  யோக முறையில் தவம் செய்துள்ளார்.
ஆதி சங்கரர் தவத்தினால்‌ ஏற்பட்ட தலை பாரத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க இங்கே வந்து தவம் செய்தார்

அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர்
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். 

பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள்.
இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம், செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.

தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது.
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம்.