கண் திருஷ்டியை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

panjamuga-anjaneyar-hanuman-poojai
கண் திருஷ்டியை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் தான் ஈடுபட்டு வருகிறோம். அப்படி முன்னேற்றம் ஏற்படும்பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு தெரியாமலேயே நம்முடைய வளர்ச்சியை பார்த்து பிறர் பொறாமை படுவதனால் கண் திருஷ்டி ஏற்படுகிறது. ஒருவருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் அவரால் மேற்கொண்டு எந்தவித வளர்ச்சியையும் அடைய முடியாது. அதோடு மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலவித கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட கண் திருஷ்டியை நீக்குவதற்கு பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும் முறையை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் 

கண் திருஷ்டி நீக்க வழிபாடு

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த கண் திருஷ்டி என்பது மிகவும் வலிமை வாய்ந்ததாக திகழப்படுகிறது. ஏதாவது ஒரு நல்லது நம் வாழ்வில் நடந்துவிட்டாலோ அதை பிறரிடம் நாம் கூறிவிட்டாலோ அதனால் நமக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டம் என்பது வந்துவிடும். கண் திருஷ்டி இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். என்ன இருந்தாலும் திருஷ்டி சுத்தி போடுவது போன்ற வழக்கங்களை நாம் பின்பற்றினாலும் கண் திருஷ்டி என்பது ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட கண் திருஷ்டியில் இருந்து வெளியே வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.

இந்த வழிபாட்டை நாம் பஞ்சமுக ஆஞ்சநேரிடம் தான் செய்ய வேண்டும். சாதாரண ஆஞ்சநேயரை விட பஞ்சமுக ஆஞ்சநேயர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராகவும் சக்தி மிகுந்தவராகவும் ஆற்றல் மிகுந்தவராகவும் திகழ்கிறார். காரணம் இந்த பஞ்சமுகங்களில் வராக, நரசிம்மர், கருட, ஹயக்ரீவர் மற்றும் ஆஞ்சநேயர் என்று ஐந்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்று சேர்ந்து இருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பஞ்சமுக ஆஞ்சநேரிடம் நாம் பலவிதமான வேண்டுதல்களை முன்வைத்து வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல்களும் முழுமையாக நிறைவேறும் என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேரிடம் கண் திருஷ்டி விலகுவதற்காக ஒரு வழிபாட்டை நாம் செய்யலாம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஆஞ்சநேயருக்கு உகந்த செந்தூரம் வேண்டும். செந்தூரம் டப்பாவாக இருந்தாலும் சரி பொடியாக இருந்தாலும் சரி அதை வாங்கிக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு செல்லக்கூடிய நாள் எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை. குறிப்பாக அமாவாசை, மூல நட்சத்திரம், சனிக்கிழமை, வியாழக்கிழமை போன்ற நாட்களாக இருப்பது கூடுதல் சிறப்பை தரும். ஆஞ்சநேயருக்கு ஒரு துளசி மாலையையும் வாங்கிக்கொண்டு செல்லுங்கள். துளசி மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்ற சொல்லிவிட்டு வாங்கி வந்த செந்தூரத்தை ஆஞ்சநேயரின் திருவடிகளில் வைத்து தரும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

மனதார ஆஞ்சநேயரிடம் எந்தவித கண் திருஷ்டியும் அணுகாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு ஆஞ்சநேயரின் திருவடியில் வைத்த செந்தூரத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். பொடியாக இருக்கக்கூடிய செந்தூரமாக இருக்கும் பட்சத்தில் அதனுடன் ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணெயை வாங்கி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அணு தினமும் பஞ்சமுக ஆஞ்சநேயரை மனதார நினைத்துக் கொண்டு இதை நம்முடைய நெற்றியில் வைப்பதன் மூலம் எந்த சூழ்நிலையிலும் நமக்கு கண் திருஷ்டி என்பது அணுகாது. அருகில் பஞ்சமுக ஆஞ்சநேயர் இல்லை என்னும் பட்சத்தில் சாதாரண ஆஞ்சநேயரின் பாதத்திலும் வைத்து வழிபாடு செய்யலாம்...

மிகவும் சக்தி வாய்ந்த பஞ்சமுக ஆஞ்சநேயரை கண் திருஷ்டி விலகுவதற்கும் எதிரிகள் தொல்லை விலகுவதற்கும் வழிபாடு செய்து முழுமையான பலனை பெற்று வாழ்க்கையில் சிறப்புடன் வாழலாம்.