பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன திருநாமங்கள்!

beeshmar-slogam
பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன திருநாமங்கள்!

மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர் முடிந்தவுடன், அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் பாண்டவர்களை அழைத்துச் சென்ற கிருஷ்ணர், அவரிடம் உயிர்கள் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை எடுத்துரைக்க வேண்டினார்.

அதை ஏற்ற பீஷ்மர் " நாராயணன் ஒருவனே நித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன் அவரை முழு நம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல சவுபாக்கியம் கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாகக் கிடைக்கும் " என்று உபதேசித்தார்.

"யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம் " என்றார்.

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

24 திருநாமங்கள்
ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ :
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ :
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ :
ஓம் நமோ நாராயணா
ஸ்ரீராமஜெயம்
‌குருஜீ