சனியையும் ஆட்டிப்படைத்த ஆஞ்சநேயரின் இரகசியம்?

hanuman-sani-bagavan-anjaneyar
சனியையும் ஆட்டிப்படைத்த ஆஞ்சநேயரின் இரகசியம்?

புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் பாதிப்பு குறையும் என நம்பப்படுகிறது.

இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.
"ஆஞ்சநேயா உன்னை இரண்டரை நாழிகை பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை நாழிகைநேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்" என்றார்.

"கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்" என்றார்.

சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார்.

"சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை நாழிகை நேரம்கழித்து தான் இறங்க வேண்டும்" என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார்.

"ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை" என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

விநாயகரை போல் ஆஞ்சநேயரும் கூட நம் அனைத்து தடைகளையும் நீக்கும் வல்லமையை பெற்றவர்.
முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வாழ்க்கையில் அந்த பக்தர் எந்த ஒரு சிக்கல்களையும் சந்திக்க மாட்டார்.

ஜெய் ஆஞ்சனேயா!!!