மதுராந்தகம் மக்களை குழப்பும் ஆதவ் அர்ஜுனா - தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார்

mathuranthagam-by-election-admk-inba-durai-tvk-adhav-arjuna
மதுராந்தகம் மக்களை குழப்பும் ஆதவ் அர்ஜுனா - தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார்

அதிமுகவின் இரட்டை இலையும் தவெகவின் விசில் சின்னமும் ஒன்றுதான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது மோசடி மோசடி மோசடி என அதிமுக எம்பியும் வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.பி இன்பதுரை தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவும், விசிலும் ஒன்றுதான் என பேசி இருக்கிறார். இது தவறு. எனவே அவர் மீது தேர்தல் ஆணையம்

நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பிறகு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அதிமுக சார்பாக மனு அளித்து உள்ளோம்.

என்ன புகார் என்றால் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசில் சின்னமும், இரட்டை இலை சின்னமும் ஒன்றுதான் எனக் கூறுகிறார்,அவர் கூறியது தவறு.

இரண்டு கட்சிகளுக்கும் வேறு வேறு சின்னங்கள் இருக்கின்றன. எங்கள் சின்னத்தை ஏன் திருடுகிறார்கள், ஏன் கடன் வாங்குகிறார்கள். இது வாக்காளர்களை குழப்பம் செயல்.

பொதுமக்கள் இதனை எவ்வாறு புரிந்து கொள்வார்கள் என்றால் அதிமுகவும், விசிலும் ஒன்று சேர்ந்து விட்டது என அதிமுகவிற்கு வாக்களிக்க நினைப்பதாக அவர்கள் விசிலுக்கு வாக்களித்து விடுவார்கள். இது தவறு. இதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் சின்னத்தை காட்டி வாக்கு சேகரியுங்கள், நீங்கள் செய்வது மக்களை திசை திருப்பும் செயல். ஜனநாயகத்தில் ஒரு கட்சியை விமர்சிக்கலாம், கொள்கையை விமர்சிக்கலாம். கடந்த காலத்தை பற்றி பேசலாம். ஆனால் ஒரு கட்சியை களவு செய்வது இப்போது தான் பார்க்கிறேன்.

தேர்தல் ஆணையம் உடனடியாக அவர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

முதலில் அதிமுகவின் வெற்றியை திருடினார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திருடினார்கள், தற்போது கட்சியை திருடுகிறார்கள் மொத்தத்தில் அவர்கள் செய்வது மோசடி மோசடி மோசடி!

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் மக்கள் அவர்களை வேண்டாம் என்று தான் முடிவு கட்டினார்கள், தாராபுரத்தில் மூன்றாவது இடமும், மதுராந்தகத்தில் இரண்டாம் இடம் வந்தார்கள்.

அதிமுக சின்னத்தை ஆதரித்து மக்கள் அந்த தொகுதியில் வெற்றி பெற செய்தார்கள். தவெகவை அல்ல என்றார்.