விஜயதசமி கொண்டாடுவது ஏன்?
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத் தை ப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர் களைத் துன்புறுத்தினான்.
தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறை யிட்டனர். அவர்களின் துயர் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திக ளும் தங்களது அம்சத்தையு ம் அவளுக்கு அளி த்து உதவினர். மகிஷ னுடன் போரிட்டாள். சூலத்தை வீசிக்கொ ன்றாள். மகிஷ னை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றி த்திருநாளையே விஜ யதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளி ல் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
வெற்றிநாளான விஜயதசமி நாளில் பராசக்தி யின் அருள் பெறும் வித த்தில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாலை வேளையில் இதைப் பாராயணம் செய்து அம்பி கையின் அருள் பெறுங்கள்.
●மலையரசனின் மகளே! உயிர்கள் வாழ அருள்புரிபவளே! விஷ்ணுவின் அம்சமாகத் திக ழ்பவளே! அர்ஜுனனால் துதிக்கப்பட்டவ ளே! நீல கண்டப் பெருமானின் மனைவியே! உலக மாகிய பெரிய குடும்பத்தைக் காப்ப வளே! மன நிறைவைத் தருபவளே! மகிஷாசுர மர்த்தினியே! அழகான ஜடை கொண்டவளே! பர்வத குமாரியே! உன் திருவடியை வணங்கு கிறேன்.
● பக்தர்கள் வேண்டும் வரம் அருள்பவளே! அசு ரர்களை அழிப்பவளே! மூவுலகங்களையும் காப்பவளே! சிவபெருமா னிடம் விருப்பம் கொண்ட வளே! தைரியமும், கோபமும் குணமாகக் கொண்டவளே! என்றும் இள மை கொண்ட கன்னியே! உன் திருப் பாதத்தை என் தலைமேல் தாங்கு கிறேன்.
● உலகின் நாயகியே! தாயாக காப்பவளே! சிரிப்பில் விருப்பம் கொ ண்டவளே! கதம்பவனத்தில் இருப்பவ ளே! மலைகளின் அரசனான இமாலா யத்தின் உச்சியில் ஸ்ரீசக்ர பீடத்தில் இருப்பவளே! கைடபரை முறியடித்தவ ளே! உன் திருவடியைப் போற்றுகிறேன்.
● சதகண்டம் என்னும் ஆயுதத்தால் ரு ண்டாசுரனைத் அழித்தவளே! கஜா சுரனி ன் துதிக்கையை துண்டித்தவளே! சாமர் த்தியம் மிக்க சிங்க வாகனம் உடையவ ளே! முண்டாசுரனை வென்றவளே! உன் கமலச் செவ்வ டிகளில் விழுந்து பணிகிறேன்.
● பாவம், தீய எண்ணம் கொண்ட எதிரிகளை அழித்தவளே! சரணாகதி அடைந்தவருக்கு அபயம் அளிப்பவளே! சூலா யுதம் தாங்கியவளே! ரக்த பீஜன், சும்பன், நிசு ம்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளே! உன் திருவடி நிழல் உலகெங்கும் வியாபி க்கட்டும்.
● தும்தும் என்ற நாதத்துடன் வருபவளே! பகைவர்களின் தலையை சதுரங்க காய் போல பந்தாடுபவளே! ஜயஜய என்ற கோஷத் துடன் துதிக்கப்படுபவளே! தேவலோக பாரிஜாத மலரைப் போல ஒளி கொண் டவளே! பாற்கடலில் பிறந்த சந்திரன் போல குளிர்ச்சி மிக் கவளே! உன் பொற்பாதங்களில் தண்டனிடுகிறேன்.
●பெண்கள் விரும்பும் பேரழகு கொண்டவளே! ராஜகுமாரியே! சுமங்கலிப் பெண்களால் சூழப்படுபவளே! தாமரை மலர் போன்ற நெற்றி கொண்டவளே! கலைக்கு இருப்பிடமாகத் திகழ் பவளே! வண்டுகள் பாடும் நறு மலர்கள் சூடியவளே! பட்டு பீதாம்பரம் அணிந்தவளே! உன் மலர் பாதங்களில் முகம் புதைக்கிறேன்.
● போர்வீரனாக விளங்கும் கார்த்திகேயனை புத்திரனாகப் பெற்றவளே! ஞானியர் நாடும் சமாதி நிலையில் விருப்பம் கொண்ட வளே! கருணைக்கு இருப்பிடமான தேவியே! கோடி சூரியர்களால் வண ங்கப்படுபவளே! கிடைத்தற்கரிய உன் திருவடியைக் கண் கொட்டாமல் காண்கிறேன்.
●அம்மா! உனது திருவடியை வணங்கும் பேறு பெற்ற நாங்கள் கல்வி கலைகளிலும், செல்வத்திலும் சிற ந்து விளங்க அருள் செய். பரம கருணையால் உலகிற் கெல்லாம் தாயாக விளங்குபவளே! உனக்கு எது விரு ப்பமோ அதை எனக்குச் செய்தருள்வாயாக. பர்வத ராஜ குமாரியே! எங்கள் வாழ்வில் வெற்றி குவிய உன்னைப் போற்றி வணங்குகிறேன்.
சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறை த்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்க ளை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி.
எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதா ல் அவளை ஆதி பராசக்தி என்பர். அவள் சிவ பெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது பவானி என்றும், அவளே ஆண் தன் மையை ஏற்கும் போது மகாவிஷ்ணு என்றும், அசுரர்க ளை அழித்து உலகத்தைக் காத்தருளும் போது காளி என்றும், வெற் றிவாகை சூடி புன்முறுவ ல் காட்டும் போது துர்கா என்றும் பெயர் பெறு கிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவ ங்களாகும்.
ஒழுக்கத் திருநாள்:
சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதி யை வணங்குவது வழக்கம். பக்தியோடு இரு ந்தாலும், ஒழுக்கத்தை பின்பற்றவில்லை சீதையை சிறையெடுத்து அசோகவனத் தில் வைத்தான். இதனால், பார்வதிதேவி க்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது.
பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வா மித்திரர் மூலம் சிறு வயதிலேயே ராமன் தேவி மந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்
அவருக்கு துர்க்கையாக காட் சியளித்த பார்வ தி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தா ள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தை யே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜய தசமி யாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றி க்கு ஒழுக் கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.