துன்பங்களைத் தொலைக்கும் ஸ்ரீ துர்க்கை அர்க்களா ஸ்லோகம்!

durgai-amman-slogam-navaratri-poojai
துன்பங்களைத் தொலைக்கும் ஸ்ரீ துர்க்கை அர்க்களா ஸ்லோகம்!

அபூர்வ ஸ்லோகம்
துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரின் ஒருமித்த ஒரே உருவம் - சண்டி. மஹிஷாசுரனோடு ஒன்பது நாட்கள் போர்புரிந்து அவனை அழித்தாள் சண்டி. இதை தேவி மஹாத்மியம் அழகுற விளக்குகிறது. 
பொதுவாகவே தேவி மஹாத்மியத்தை பாராயணம் செய்யும் முன் இந்த ‘துர்க்கா அர்க்களா’ ஸ்தோத்திரத் தை பாராயணம் செய்வது மரபு. இத்துதியை பாராயணம் செய்து வந்தால் அழகு, வெற்றி, புகழ் எல்லாம் கிட்டும். 

நவராத்ரி ஒன்பது நாட்களும் இத்துதியை பாராயணம் செய்து துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரின் திருவருளையும் சண்டிகா தேவியின் பேரருள் மூலமாக பெறலாம்.

ஜயந்தீ மங்கலா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவா தாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே.
ஜயந்தீ, மங்கலா, காளீ, பத்ரகாளீ, கபாலினீ, துர்க்கா, க்ஷமா, சிவா, தாத்ரீ, ஸ்வாஹா, ஸ்வதா எனப் பெயர் பெற்ற தேவியே, உனக்கு நமஸ்காரம்.
மது கைடப வித்ராவி விதாத்ரு வரதே நமஹ
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி

மது-கைடபரை நாசம் செய்தவளே, பிரம்மாவிற்கு அருள் புரிந்தவளே, உனக்கு நமஸ்காரம். எனக்கு அழகு உருவம் அளிப்பாயாக, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

மஹிஷாஸுர நிந்நாச விதாத்ரி வரதே நமஹ
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
மஹிஷாசுரனை வதைத்து தேவர்களைக் காத்த தேவியே நமஸ்காரம்.
பிரம்மாவிற்கு வரத்தை அளித்த பேரருளே நமஸ்காரம்.
எனக்கு அழகு உருவம் அளிப்பாயாக, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

வந்திதாங்க்ரி யுகே தேவி தேவஸெளபாக்ய தாயினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
உலகோர் அனைவராலும் வணங்கப்பெற்ற சரண கமல பாதங்களை உடையவளே நமஸ்காரம். தேவர்களுக்கு விரோதிகள் தோன்றாதவாறு வெற்றி அளிப்பவளே, நமஸ்காரம். எனக்கு அழகு உருவம் அளிப்பாயாக, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

ரக்தபீஜ வதே தேவி சண்டமுண்ட விநாஸினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
ரக்தபீஜனை வதைத்த தேவியே, சண்ட-முண்டரை நாசம் செய்தவளே நமஸ்காரம். எனக்கு அழகு உருவம் அளிப்பாயாக, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வசத்ரு விநாஸினி  
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
வியக்கவைக்கும் உருவமும், பிரமிக்கவைக்கும் சரித்திரமும் படைத்தவளே நமஸ்காரம். எல்லாவகை எதிரிகளையும் நாசம் செய்பவளே நமஸ்காரம். எனக்கு அழகு உருவம் அளிப்பாயாக, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

நதேப்ய: ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
பரப்ரம்ம ஸ்வ்ரூபிணியான சண்டிகையே நமஸ்காரம். எப்போதும் பக்தியுடன் வணங்குவோர்க்கும், உன்னை நமஸ்கரிக்கும் எனக்கும் அழகு உருவம் அளிப்பாயாக, வெற்றியை அருள்வாயாக, புகழை வழங்குவாயாக, விரோதிகளை அழிப்பாயாக.

ஸ்துவதப்யோ பக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாஸினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
சண்டிகையே, நோய்களை விரட்டுபவளே,
பக்தியால் உன்னைத் துதிப்போர்க்கு அழகு உருவம் அளிப்பாயாக, வெற்றியை அருள்வாயாக, புகழை வழங்குவாயாக, விரோதிகளை
அழிப்பாயாக.

சண்டிகே ஸததம் யே த்வாமர்ச்சயந்தீஹ பக்திதஹ
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
சண்டிகையே, யார் எப்போதும் உன்னை பக்தியுடன் அர்ச்சிக்கிறார்களோ, அவர்களுக்கு அழகு உருவம் அளிப்பாயாக, வெற்றியை அருள்வாயாக, புகழை வழங்குவாயாக, விரோதிகளை அழிப்பாயாக.
தேஹி ஸெளபாக்யம் ஆரோக்யம் தேஹி தேவி பரம் ஸுகம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி

மிகுந்த சௌக்கியமும், நீண்ட ஆரோக்கியமும் அருள்பவளே தேவி, நமஸ்காரம். பிரம்மானந்தமாகிய பரம சுகத்தை அருள்பவளே, நமஸ்காரம். எனக்கு அழகு உருவம் அளிப்பாயாக, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

விதேஹி த்விஷதாம் நாசம் விதேஹி பல முச்சகைஹி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
அனைத்து சத்ருக்களையும் நாசம் செய்பவளே, எனக்கு நிரந்தர உடல்வலுவை அளிப்பவளே, நமஸ்காரம். எனக்கு அழகு உருவம் அளிப்பாயாக, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
மங்கலத்தை அளிப்பவளே, பரந்த செல்வத்தை வழங்குபவளே, நமஸ்காரம். எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ்மீவந்தம் ஜனம் குரு
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி

கல்விமானாகவும், புகழ்பெற்றவனாகவும், செல்வம் படைத்தவனாகவும் என்னை உருவாக்குவாய் தாயே.  
எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.
ப்ரசண்ட தைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணதாயமே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி

பிரபலமான தைத்ரியர்களின் கர்வத்தை அழித்தவளே நமஸ்காரம். சண்டிகையே, உன்னை வணங்கும் எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே
பரமேஸ்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
நான்கு கரங்களையுடைவளே, நான்முகப் பிரம்மனால் துதிக்கப்பெற்றவளே, பரமேஸ்வரி நமஸ்காரம்.
எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.
க்ருஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி சச்வத் பக்த்யா ததாம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி

தேவி, அம்பிகையே, இடைவிடாது கிருஷ்ணனால் துதிக்கப்பெற்றவளே, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.
ஹிமாசலஸுதாநாத பூஜிதே பரமேஸ்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
பார்வதிநாதனால் பூஜிக்கப்பட்டவளே,
பரமேஸ்வரி, எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

ஸுராஸுர சிரோரத்ன நிக்ருஷ்ட சரணம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
தேவர்களும் அசுரர்களும் ரத்னங்கள் பூண்ட தங்கள் தலையால் தொட்டு வணங்கும் திருப்பாதங்கள் கொண்டவளே, அம்பிகையே நமஸ்காரம். எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

இந்த்ராணீபதி ஸத்பாவ பூஜிதே பரமேஸ்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
இந்த்ராணீயின் பதியான தேவேந்திரனால் உள்ளன்புடன் பூஜிக்கப் பெற்றவளே,
பரமேஸ்வரி! எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.

தேவி ப்ரசண்ட தோர்தாண்ட தைத்யதர்ப்ப விநாஸினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
கொடிய தோள்வலி படைத்த துஷ்டர்களின் கொட்டத்தை அடக்கியவளே, நமஸ்காரம். எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.
தேவி பக்தஜனோத்தாம தத்தானந்தோதயேம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோஜஹி
தேவி, பந்தங்கள் யாருமின்றி ஏங்கி வருந்தும் பக்தர்களுக்கு பரமானந்த மூலமான முக்தியை அளிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.

எனக்கு வெற்றியை அருள்வாயாக, எனக்குப் புகழை வழங்குவாயாக, என் விரோதிகளை அழிப்பாயாக.
பத்னீம் மனோரமாம் தேஹி மனோவ்ருத்தானுஸாரிணீம்
தாரிணீம் துர்க்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்.

மனதுக்கினியவளாக விளங்குபவளே,
மனதின் போக்கை நல்வினை நோக்கித் திருப்பு
பவளே,  கடத்தற்கு அரிய ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்கு பேருதவி புரிபவளே, நற்குலத்துதித்த பெண்ணை மனைவியாக அளிப்பாயாக.

இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேந்நரஹ
ஸ து: ஸப்தசதீ ஸங்க்யா வர மா-ப்னோதி ஸம்பதஹ.
இத்துதியை படித்து மஹா ஸ்தோத்திரமான தேவி மாஹாத்மியத்தை படித்தால் சிறந்த பலன்கள் கைகூடும். ஸகல சம்பத்துகளையும் அடைய துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியரின் சமஷ்டி வடிவான சண்டிகா தேவி திருவருள்புரிவாள்.

நிஜஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ
தன்னுடைய பேச்சின் இனிமையால் சரஸ்வதி தேவி வைத்திருக்கும் கச்சபீ என்கிற வீணையைக் கூட தோற்கடித்தவள்.

காமேச பக்த மாங்கல்ய ஸூத்ர சோபிதகந்தரா
விவாக காலத்தில் காமேஸ்வரரால் கட்டப்பட்ட ஸௌபாக்ய ஆபரணமான திருமங்கல்யத்தினால் சோபிதமான கழுத்தை உடையவள்.

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ
மிகவும் சிவந்த, அதாவது ஸூர்யனுடைய ஸாரதியான அருணனைப் போல் சிவந்த, கௌஸும்ப வஸ்திரத்தோடு பிரகாசிக்கும் இடையை உடையவள்.