அன்னை பாகம்பிரியாள் திருக்கோவில்!
மூலவர் : வன்மீகநாதர்
பழம்புற்று நாதர்
அன்னை: பாகம்பிரியாள்
அமைவிடம்:இராமநாதபுரம் மாவட்டம்
தல சிறப்பு : தீராத நோய்களையும்
தீர்த்து வைப்பாள் பாகம்பிரியாள்.
காலில் ஏற்பட்ட புற்று தீர
பெருமாள் வழிபட்ட தலம்
புற்றுநோய் தோல்நோய் விஷகடி
போன்ற சகல நோய்களுக்கும்
வைத்தியம் பார்க்கிறாள்
அன்னை பாகம்பிரியாள் .
அன்னையை மருத்துவச்சி அம்மன்
என்றே அழைக்கிறார்கள்
இப்பகுதி மக்கள்.
வியாழன் இரவு இக்கோவிலில் தங்கி
வெள்ளிகிழமை காலை கோவில்
முன்புள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி
அம்மனை வழிபட்டால்
அனைத்து நோய்களுக்கும்
அன்னை ஆறுதல் அளிப்பாள்
என்பதை இக்கோவிலில் கூடும்
பக்தர்கள் கூட்டத்தை பார்த்தாலே
தெரிந்துகொள்ளலாம்.
இக்கோவிலில்
தங்கி வழிபட்டவர்களை
விஷம் தீண்டாது என்பது நம்பிக்கை.
திருவெற்றியூர் பாகம்பிரியாள் திருக்கோயில்
தீரா பிணியும் துன்பங்களும் துயரங்களும் நீங்கிடும் அற்புத திருக்கோவில்
இந்த கோவிலுக்கு போயி தரிசனம் பன்னுவங்களெல்லாம் கஷ்டங்களும் கவலைகளும் இல்லாமல் சந்தோஷமா வாழ்றாங்க...!
குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து செய்தால் உங்கள் தொழில் விருத்தியடைந்து, உங்கள் தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறிவிடுவீர்கள்.
இந்த கோவிலுக்கு சென்றால், உங்கள் தொழில் மட்டுமல்ல, குடும்பமும் சேர்ந்தே வளமான பாதைக்கு திரும்பும், சண்டை, சச்சரவுகள் தீர்ந்து, கல்வியும் செல்வமும் நிலைப் பெறும். திருமண தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் சில வருடங்களிலேயே முற்றிலும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் வீசும் என்று இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடித்து கூறுகிறார்கள்.
எங்கு அமைந்துள்ளது :
அருள்மிகு பாகம்பிரியாள் அம்மன் சமேத வல்மிகநாத சுவாமி திருக்கோவில் தாங்க அது. ராமநாதபுர மாவட்டத்தின் திருவாடானை- தொண்டிக்கி அருகே அமைந்துள்ளது. திருவெற்றியூர்.
திருவாடானையில் இருந்து கிழக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கு செல்ல திருவாடானையிலிருந்து, அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
அம்மன் பெருமை :
சிவனுள் ஒரு பாகத்து சக்தியை தான் பெற்றுக் கொண்டதாலும் ஜாதி மத இன மொழி பிரிவினை பாராமல் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்வதாலும் பாகம்பிரியாள் அம்மன் என்ற திருப்பெயர் அம்மனுக்கு உண்டானது.
வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கிடும் வள்ளலாக அன்னை பாகம் பிரியாள் அம்மன் அருள்பாலிக்கிறார். அறிவு ஒளி தரும் அன்னையாக இவர் இருக்கிறார். இவரை மனதார தொழுதால் கல்வியும், ஞானமும் ஒருவருக்கு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருமணத் தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், தீராத நோய்களுக்கு கூட அம்மனை வேண்டினால் தாமாக விலகும் என்பது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வெகு உறுதியான நம்பிக்கை.
கோடி கோடியாய் சொத்து சேர்த்தாலும்... குடும்ப பிரச்சினை, உடலில் நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து சுவாமி அம்பாளை வழிபட்ட பின் நிச்சயம் உறுதியாக வெற்றியடையலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தினமும் புதிய பக்தர்கள் அம்மனின் அருளாசியை நாடி திருவெற்றியூருக்கு வருகை தருகிறார்கள்.
இந்த சிவாலயத்துக்கு பிற மதத்தார்களும் கிறிஸ்துவ- முஸ்லிம் பக்தர்கள் அதிகமாக வருகை தந்து அன்னையின் திருவருளை பெற்றுச் செல்கின்றனர்.
காலம் : கல்வெட்டுக்களை நோக்கினால் இந்த கோவிலின் வரலாறு தெரியவரும். அதாவது இதன் பழமை என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இந்த கோவிலின் கல்வெட்டுக்களில் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் நடைபெற்ற கல்வெட்டியியல் ஆய்வுகளின் மூலம் சில அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது என்பது கூறப்பட்டுள்ளது.
வேறு பெயர்கள் :
புராண காலப் பெயர்கள் என சில பெயர்கள் கல்வெட்டியியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தற்போது திருவெற்றியூர் என்று நாம் அழைக்கும் இந்த கோவிலின் புராண கால பெயர்களாக ஜெயபுரம், வேப்பங்கா, நிம்பவனஷேத்திரம், என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் :
இந்த சிவாலயம் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்துக்கு பாத்தியப்பட்ட ஆலயமாகும். சிவகங்கை சமஸ்தானத்தால் 108 திருக்கோவில்களை நிர்வாகம் செய்யப்படுகிறது. அவற்றில் தலைசிறந்த முதன்மையான திருக்கோயிலாக விளங்குவது அருள்மிகு பாகம் பிரியாள் அம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலை மேதகு ராணி மதுராந்தகி நாச்சியார் அவர்கள் மேற்பார்வையில் தெய்வ திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவில் அமைப்பு :
மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்பது போல் அழகிய கோவில் இது. ஆலயத்தின் முன்புறம் கிழக்கே வாசுகி தீர்த்த திருக்குளமும், ராஜகோபுரமும், பக்தர்கள் தங்குவதற்கு மூன்று மண்டபங்களும் விடுதிகளும் உள்ளது.
கோவில் வரலாறு :
புராண கால வரலாற்றில் தான தர்மத்தில் சிறந்து விளங்கிய மன்னன் மகாபலி சக்கரவர்த்தியை மக்கள் கடவுள்களை மறந்து மன்னனையே தெய்வமாக வணங்கினர். பூவுலகத்தில் பக்தி மார்க்கம் நிலைத்து நிற்க மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மன்னனிடம் மூன்றடி நிலம் வரமாக பெற்று, ஒரு அடியால், பூவுலகையும் இரண்டாவது அடியாக வானத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் மன்னனின் தலையில் கால் வைத்து மகாபலியை அழித்தார் மகாவிஷ்ணு.
இதனால் தர்ம தேவதையின் சாபத்திற்கு உள்ளான மகாவிஷ்ணுவுக்கு காலில் புற்று ஏற்பட்டது இந்த நோயிலிருந்து விடுபட பாண்டிய நாட்டில் உள்ள 18 சிவ தீர்த்தங்களில் நீராடி கடைசியில் திருவெற்றியூர் வந்தடைந்து இங்குள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை வணங்கியதால் காலில் உள்ள புற்று மாயமாக மறைந்தது. பிறகு இத்தலத்திலே மகாவிஷ்ணு சிவபெருமானிடமே ஐக்கியமானதாக தல வரலாறு.
அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் வாசுகி நாகத்தை மத்தாக நட்டு பாற்கடலை கடைந்தனர். வலி பொறுக்க முடியாத வாசுகி நஞ்சினை கக்கியதால் ஆளகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களின் சாபத்துக்கு உள்ளாகி நோய்க்கு உள்ளானார் வாசுகி. இத்தலத்தில் சுவாமி அம்மனை வணங்கியதால் சாபம் நீங்கி நலம் பெற்றார். வாசுகி நாகம் இவ்வாலயத்தில் ஐக்கியமாகி நாகபுத்தடியாக இன்றும் காட்சியளிக்கிறார். வாசுகி நாகம் நீராடியதால் கோவில் குளம் வாசுகி தீர்த்தம் என்ற பெயருடன் அபூர்வ சக்தி கொண்டதாக விளங்குகிறது. என்பது வரலாற்று சுருக்கம்.
நீங்களும் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் காண வேண்டுமா?
உங்கள் தொழில் வளர்ச்சியடைந்து நீங்களும் உங்கள் தொழிலில் பெரிய நபராக ஆக வேண்டுமென்றால் இந்த கோவிலுக்கு செல்ல சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி, அம்மனுக்கு, அர்ச்சனை பால் அபிஷேகமும் செய்தாலே போதும் என்று கூறுகிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.
கோவிலுக்குள் செல்லும் முறை :
ராஜ கோபுர சன்னதிக்கு நேராக கிழக்கு நோக்கி அமைந்த வல்மீகநாத சுவாமியை தரிசனம் செய்து, தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு முடித்துவிட்டு, சுற்றுப்பிரகாரத்தில் உள்ள விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகர், சண்டிகேஸ்வரர் பைரவர், நவகிரகங்கள், வழிபாடு செய்து அம்மன் சன்னதிக்கு எதிரே வெளியே வரவேண்டும்.
வேண்டுதல்களும் படையல்களும்
பிராத்தனையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
அம்பாளின் சன்னதியில் மாவிளக்கு போட்டால் மனக்குறைகள் அகலும். அம்பாளின் அபிஷேக தீர்த்தமோ தீராத நோய்களையும் தீர்த்தருளும்.... மருத்துவத்துறைக்கு சவாலாக உள்ள பலவிதமான நோய்கள் அம்மனின் தீர்த்தத்தாலும் திருவருளிலினாலும் குணமாகிறது.
நடை திறப்பு:
பாகம்பிரியாள் அம்மன் கோவில் நடை காலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டு, மதியம் 12 மணி வரையிலும்,
மாலை : 4 மணி முதல் இரவு: 8 மணி வரையில் திறந்திருக்கும்.
வியாழன், வெள்ளி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதால் வியாழன் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:45 வரை கூடுதலாக திறந்திருக்கும்.
பூஜைகள் : ஆறு கால பூசை நடைபெறுகிறது.
அதிகாலை ; காலை ; மதியம்
சாயங்காலம் : மாலை : இரவு
திருவிழாக்கள் :
சித்திரை திருவிழா மிருகசீரிஷ நட்சத்திரத்தில் கொடியேறி, காப்பு கட்டி, ஐந்தாம் நாள் இரவு திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் அஸ்தம் நட்சத்திரத்தில் தேரோட்டமும், சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், வெகுவிமரிசையாக 10 நாட்கள் திருவிழா நடக்கின்றன. ஆடியில் கடைசி திங்கள்கிழமை இரவு பூச்செரிதல் திருவிழா வெகு சிறப்பு.
சித்திரை பத்தாம் திருவிழா தீர்த்தவாரி, மிகவும் விமர்சையாக நடைபெறும் திருவிழாவாகும். இதில் பல ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கோவில் சிறப்பு :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற முதன்மையான தலமாக விளங்குவது ராமேஸ்வரம். அடுத்து இரண்டாவது தலம் இந்த திருவெற்றியூர் ஸ்ரீ-பாகம்பிரியாள் அம்மன் கோவில்.
அம்மன் அருளாசி :
மதுரை ஆயிரவைசிய செட்டியார் மரபில் வந்த 14 வயது பாலகன் பிறவியிலிருந்து வாய் பேசாமல் இருந்து, அம்மனின் திருவருளினால் ஆலயத்தில் பிறவி ஊமை பேசியது. உலகறிய செய்ய பையனின் பதுமை சிலையை அம்மனுக்கு காணிக்கையாக வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடம்பூரை சேர்ந்த ரெங்கரெட்டி என்பவர் சிவகங்கையில் டிஎஸ்பியாக பணியாற்றியனார், அவர்களின் புதல்வி புத்தி சுவாதீனம் முற்றிய நிலையில் சில ஆண்டுகளாக குணமாகாமல் இருந்த நிலையில் ஆலயத்தில் ஒரு வாரம் தங்கி வழிபாடு செய்ததால், அம்மனின் திருவருளினால் நங்கை நலம் பெற்றார். அம்மனின் அருளால் நலம் பெற்றதை எண்ணி காலத்திலால் நினைவில் இருக்க வேண்டும் என எண்ணி வெண்கலத்தினால் செய்யப்பட்ட பதுமை சிலை ஒன்றினை காணிக்கையாக வைத்துள்ளனர்.
ஆலயத்தில் இன்றும் பக்தர்களின் பார்வைக்காக காணிக்கை பொருள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
எப்படி செல்வது :
மதுரையிலிருந்து சிவகங்கை வழியே தொண்டி சாலையில் திருவாடானை கிழக்கே 10 கிமீ தொலைவில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் அமைந்துள்ளது.
திருச்சி, காரைக்குடி, மதுரை, பரமக்குடி, ஊர்களிலிருந்து கோவிலுக்கு நேரடியாக பேருந்து சேவை உள்ளது.
நன்றி : அரசு நாயகன்