சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமான்!

sangu-chakkaram-god-murugan
சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமான்!

பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் தஞ்சாவூர் மாவட்டம், அழகாபுத்தூரரில் உள்ள அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவிலில் தான் முருகப்பெருமான் இந்த அரிதான திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஒருமுறை அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவபெருமான் முருகபெருமானை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, அவரும் கிளம்பினார். அப்போது சிவபெருமானும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்து ஆசி புரிந்தார். 

ஆயுதங்களுடன் சென்ற முருகபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர_மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் கல்யாணசுந்தர_சண்முகசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். 

அவர் அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர். மயில் இடது புறமாக திரும்பி நிற்பது ஒரு மாறுபட்ட அமைப்பாகும். சங்கு, சக்கரம் ஏந்திய முருகப்பெருமானை வணங்கினால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்..!!

அமைவிடம்: அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில், அழகாபுத்தூர், திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.

*ஸ்ரீ முருகன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!* 
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
*அடியேன்*
*ஆதித்யா*