திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்!
அம்பிகை பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு வடிவங்கள் எடுத்தாலும் அவள் இருப்பது பக்தர்களின் இதயத்தில்தான். அற்புதங்கள் நிகழ்த்தும் ஈசனின் அருகி ல் எப்போதும் அம்பிகை இருந்து, அவரிட ம் தம் குழந்தைகளின் தேவைகளைத் தெரிவிக்கிறாள் அம்பிகை.
அப்படிப்பட்ட சிறப்பான தலங்களில் ஒன்று திருவொற்றியூர். இங்கு அம்பிகை திரிபுரசுந்தரி, வடிவுடை மாணிக்கம், வடிவுடையம்மன் என்றெல்லாம் அழைக்க ப்படுகிறாள்.
பல காலங்களுக்கு முன்பு, இப்பகுதியை ஆண்ட அரசன் திருத்தலங்கள் உட்பட எல்லா இடங்களுக்கும் வரி விதித்து சுற்றோலை அனுப்புகிறான்.
அப்போது இக்கோயிலுக்கு வந்து திரும்பி ய ஓலை யில் உள்ள வரிகளின் நடுவில் "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க!' என்று இறைவனால் எழுதப் பட்டிருந்தது. எனவே இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்' என்று பெயர் ஏற்பட்டது.
உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று, தன்னை வழிபட்ட வாசுகி பாம்பை ஈசன் தன் திருமேனியில் ஐக்கியம் செய்து கொண்ட தலம் இது. சுந்தரர், சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண் டு, இங்குள்ள மகிழ மரத்தடியில்தான் "நான் உன்னைப் பிரியேன்!' என்று சத்தியம் செய்து கொடுத்தார்.
இங்குள்ள வட்டப்பாறை அம்மன் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு காலத்தில் இங்கு காளியின் உக்கிரத்தை ஸ்ரீஆதிசங் கரர் தணித்து, சாந்தப்படுத்தியதாகத் தல வரலாறு கூறுகிறது. பட்டினத்தாருக்கு பேய்க் கரும்பு இனித்த இடம் இது. எனவே இதுதான் தனக்குரிய இடம் என்று உணர் ந்து இங்கு சமாதியானார்.
ஞான சக்தியாக இத்தலத்தில் எழுந்தரு ளியுள்ள அன்னை, தன் பக்தர்கள், ஞான மும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள் புரிகிறாள்.
நாள்தோறும், உச்சிக்கால பூஜையின் போது, சிவப்பு நிறச் சேலையை அம்மனு க்கு உடுத்தி, பலாப்பழம் நைவேத்யமாகப் படைத்தால், வேண்டுவன அனைத்தும் அம்பிகை அருள்கிறாள்.
பூலோகத்தில் முதன் முறையாக நிர்மாணி க்கப்பட்டக் கோயில். அதன் பழைமைத் தன்மை மாறாமல் இன்றும் காத்து வருவது மிகவும் சிறப்பானது. ஆலயத்திற்குள் நுழையும்போதே அந்த தெய்வீகச் சூழல் நம்மை சிலிர்ப்படைய வைக்கிறது. மணற்பரப்பில் நடந்து செல்லும்படி பிரகாரச் சுற்று நடைபாதை அமைந்திருக்கிறது.
இங்கு அம்பிகை நின்ற கோலத்தில் தன் பெயருக்குத் தகுந்தாற்போல் அழகான தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள். கருணை ததும்பும் விழிகளுடன் அபயக் கரம் நீட்டி அழைக்கிறாள் அம்பிகை.
இங்கு அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிகச் சிறப்பு. இங்கு அத்தி மரம், மகிழ மரம் தல விருட்சமாகவும், பிரம்ம தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தமும் உள்ளது.
ஒரே சமயத்தில் மூன்று அம்மன்களையும் வணங்கினால் விரும்பியது கிடைக்கும் என்கிறார்கள். சித்ரா பெüர்ணமி அன்று அம்பிகையை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்று கூறப்படுகிறது.
திருவொற்றியூரைச் சுற்றியுள்ள மேலூர் திருவுடையம்மன், திருமுல்லைவாயில் கொடியிடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆகிய மூன்று அம்மன் களையும் ஒருசேர இந்த நாளில் தரிசித் தால், வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இம்மூன்று அம்பிகைகளும் நின்ற கோல த்தில் காட்சி அளிக்கிறார்கள். திருவுடை யம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடைய ம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடைய ம்மன் கிரியா சக்தியாகவும் விளங்குகிறார்கள்.
இந்த மூன்று அம்மன்களும் ஒரே சிற்பி யால் செய்யப்பட்டவை என்று வரலாறு கூறுகிறது. விக்கிரம சோழ மன்னன், வட நாட்டுப்போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வரும்போது, இக்கோயிலில் சக்தி இல்லா மல் சிவன் மட்டும் இருப்பதை க் கண்டு, ஒரு சிற்பியை அழைத்து அம்பிகையின் சிலை ஒன்றைச் செய்ய உத்தரவிட்டான்.
அலைந்து திரிந்த சிற்பி, தகுதியான கல் ஒன்றை மலை உச்சியில் கண்டான். அதை எடுத்து வரும்போது அக்கல் உடை ந்து மூன்றாகச் சிதறியது.
தன் தவறுக்கா க சிற்பி, கையை சிதைத் துக் கொள்ள முயன்றபோது, அம்பிகை தடுத்து, அவன் எதிரில் தோன்றி, "உன்மேல் எந்தத் தவறும் இல்லை. இச்சா, கிரியா, ஞான சக்தியாக நான் மூன்று தலங்களில் ஆட்சி செய்யப் போகிறேன். மூன்று கல்லில் மூவகை உருவத்தையும் சிலையாக வடித்து, பிரதிஷ்டை செய்து விடு!' என்று உத்தரவிட, அதேபோல் அமைக்கப்பட்டது.
அம்பிகைக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் பெüர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அம்பிகையை வந்து தரிசித்து, மனமுருகி, தங்கள் கோரிக்கை களை வைத்தால், கனிவுடன், உடனே நிறைவேற்றுகிறாள். தங்கள் விருப்பங்க ள் நிறைவேறிய பக்தர்கள் அம்பிகைக்கு, சிவப்பு நிறப் புடவை அணிவித்து, பலாப்பழம் சமர்ப்பிக்கிறார்கள்.
தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ள பரபரப்பான சென்னை மாநகரில் அமைந் துள்ள இக்கோயில் வளாகம் அமைதியும், தெய்வீகமும் நிறைந்து காணப்படுகிறது. அம்பிகையை வணங்கி, மணலில் கால் பதிய நடப்பது பரவசமூட்டும் அனுபவமாக இருக்கிறது. கனியும் நம்மனதில் கவலை கள் நீக்கி, நம் கண் எதிரில் தோன்றும் காட்சிகளையெல்லாம் இனிமை ஆக்குகி றாள் அம்பிகை.
பொருள் நினைந்து, அதிலேயே உழலும் நம் மனதின் இருளை அகற்றுகிறாள் வடிவுடை அம்மன். நம் மன இருளை அகற்றி, ஒளியைத் தந்து ஞானத்தை அருள்கிறாள் அம்பிகை.
ஓம் சக்தி...