“விஜய்க்கு ஓர் ஆபத்து வந்தால் அது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் தான்” - ஆர்.எஸ்.பாரதி.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணி தேவி!
அன்னபூரணி என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது மகாபவித்ரமான காசி மாநகரம். மற்றொன்று ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணா ஸ்தோத்திரம்.
கந்தமகா புராணத்தில் உள்ள அருணாச்சல மகாத்மியத்திலும் மார்க்கண்டேய புராணத்தி ன் துணை நூலான காமாட்சி விலாசத்திலும் அன்னபூரணியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தேவரும் முனிவரும் எப்போதும் தியானிக்கும் கயிலை வாசன், ஏகாந்தமாக தவத்தில் ஆழ்ந் திருந்த சமயம் பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்களைப் பொத்தினாள். சூரிய, சந்தி ரர்களை வலது இடது கண்களாகவும், அக்கி னியையே நெற்றிக் கண்ணாகவும் கொண்ட வர் சிவபெருமான். தேவி அவர் கண்களைப் பொத்தியதால் சூரிய, சந்திரர்கள் தம் ஒளியிழந்தனர்.
அதனால் உலகம் இருண்டது. அனைத்து உயிர் களும் பரமேஸ்வரனை சரணடைந்தனர். அவர் தன் அக்கினிமயமான நெற்றிக்கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளி யைத்தந்தார். இவைஅனைத்தும் கண்ணிமை க்கும் நேரத்தில் நடந்ததால் பார்வதி தேவி பயந்து உடனே தன் கைகளை ஈசனின் கண்களிலிருந்து எடுத்தாள்.
கூடவே மனம் கலங்கி அவரிடம் “நான் விளை யாட்டாக தங்கள் கண்களை பொத்தியதால் ஏற்பட்ட பாவம் நீங்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டாள்.
“நமக்கு இது கண்ணிமைக்கும் நேரமே என்றா லும் உலக உயிர்களுக்கு அது எவ்வளவு காலம் என்று உனக்குத் தெரியாதா தேவி? ஏன் இந்த குறும்புத்தனம்? ஆனாலும் நீ உலகிற்கெல்லாம் அன்னை. ஆகவே உன்னை ஒரு பாவமும் அணுகாது” என்றார் ஈசன்.
அந்த வார்த்தைகளால் சமாதானமடையாத அம்பிகை பூவுலகில் தவம் செய்து தன் மீது ஏற்பட்ட பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட முயன்றாள். ஈசனின் அனுமதி பெற்று தென்திசை நோக்கி புறப்பட்டாள்.
அந்த சமயம் காசி திருத்தலம் மழையின்மை காரணமாக கடும் பஞ்சத்தில் ஆழ்ந்திருந்தது. மக்கள் பசியினால் துடித்தார்கள். தேவி காசியை அடைந்து அங்கு அற்புதமான ஒரு திருக்கோயிலை எழுப்பி அன்னபூரணி எனும் பெயரில் நிலைகொண்டாள்.
அவள் திருக்கரத்தில் என்றுமே வற்றாத அட்ச ய பாத்திரம் எனும் அமுதசுரபியும் பொன்னா லான கரண்டியும் இருந்தன. அவள் உயிர்களு க்கு உணவு வழங்க ஆரம்பித்தாள். அதனால் மக்களின் பசிப்பிணி நீங்கியது. மக்கள் அன்னபூரணியை போற்றிப் புகழ்ந்தனர். அதனால் அவள் புகழ் திக்கெட்டும் பரவியது.
காசியில் கடும்பஞ்சம் நிலவும் வேளையில் அன்னபூரணி தேவி அனைவருக்கும் உணவளிக்கும் செய்தியை அறிந்த மன்னன், தேவியைச் சோதனை செய்ய எண்ணினான்.
தன் வீரர்களை அவளிடம் அனுப்பி சிறிதளவு தானியம் கடனாகப் பெற்று வர பணித்தான். அதன்படி அம்பிகையிடம் வந்த வீரர்கள் மன்னனின் ஆணையைத் தெரிவித்தார்கள்.
அதற்கு தேவி, “நான் தானியங்களைத் தர மாட் டேன். வேண்டுமென்றால் உங்கள் மன்னன் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து உணவருந்திச் செல்லலாம்” என்றாள். விவரம் தெரிந்து கொண்ட மன்னனும் அவன் அமைச்சரும் மாறுவேடம் பூண்டு அன்னபூர ணி எழுந்தருளியிருந்த திருமாளிகைக்குச் சென்றனர்.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணவருந் திக் கொண்டிருந்தனர். மன்னனும் அமைச்ச ரும் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவ ருந்தினார்கள். தேவியின் திருக்கரத்தில் உள்ள தங் கபாத்திரத்திலிருந்து அள்ள அள்ள க் குறையாத உணவு வந்து கொண்டிருந்ததை க் கண்ட மன்னன், அவள் சாட்சாத் பராசக்தி யே என்பதனை உணர்ந்தான்.
தேவியின் திருவடிகளை பணிந்தான். “தாயே என் அரண்மனைக்கு எழுந்தருளி அடியேனை ஆட்கொள்ளவேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கதறினான். அவன் பக்திக்கு மெச்சிய தேவி தன் சுய உருவத்தை அவனுக்குக் காட்டினாள்.
‘அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்
முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்.‘
பொருள்: அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது.
‘ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவத்யன்னபூர்ணே
மமாபிலிக்ஷித மன்னம் தேஹி ஸ்வாஹா‘
மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பார்கள்