Breaking News :

Sunday, October 27
.

11 தலைகளுடன் அருளும் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி!


இராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ சுவாமிநாத சுவாமி திருக்கோவில். இங்கு ஸ்ரீ சுவாமிநாத சுவாமி 11 தலைகளுடனும் 22 கரங்களுடனும் அருள்பாலிக்கிறார்.

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பாக ஸ்ரீ சுவாமிநாத சுவாமி இங்கு வந்ததாகவும் அப்போது அவர் 11 தலைகளுடனும் 22 கரங்களுடனும் காட்சி தந்ததாகவும் இத்திருக்கோவில் தல புராணம் கூறுகிறது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், புத்தி சுவாதீனமற்றவர்கள் புத்தி சுவாதீனம் உள்ளவர்களாக மாறவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

இத்திருக்கோவில் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும், மலை 05.30 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

5 தலைகளுடன் அருளும் ஸ்ரீ ஓதிமலையாண்டவர்
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள இரும்பறை என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த ஓதிமலையாண்டவர் திருக்கோவில். இங்கு தான் ஸ்ரீ முருகப்பெருமான் ஐந்து தலைகளுடன் அருள்கின்றார்.

சிவபெருமானுக்கு உபதேசம் செய்த தலமாதலால் ஓதிமலை என்றும் சுவாமி ஸ்ரீ ஓதிமலையாண்டவர் என்றும் பெயர் பெற்றார். இங்கு போகர் யாகம் செய்தபோது அந்த யாககுண்டத்தில் சாம்பல் வெண்மை நிறத்தில் இன்றும் உள்ளமது. அந்த சாம்பலே இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

ஸ்ரீ ஓதிமலையாண்டவரின் பக்தர்கள் எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்பு பூ வைத்து அனுமதி பெற்றுத் தொடங்குவது வாடிக்கையாக உள்ளது.

இத்திருக்கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஓம் முருகா !

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.