#Reading_Marathon_2023
Books -19
#ஆண்டுவிழா2023
#இரண்டாம்_வாரம்
பிரிவு: #சுயமுன்னேற்றம்
நூல்: ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க
ஆசிரியர்: கோபிநாத்
பக்கங்கள்: 112
இந்த புத்தகம் முழுவதும் நேர்மறையான எண்ணங்களே பரவிக்கிடக்கிறது.
ஆனால் இந்த நூலுக்கு கோபிநாத், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்கனு ஏன் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை.
பொதுவாக மனித இயல்பு மறைத்து வைக்கும் பொருளைதான் முதலில் பார்க்க தோன்றும்.
அதனால்தான் இதை வாங்காதீங்கனு சொன்னால் அதில் என்னதான் இருக்கும் என்று வாங்கி பார்த்திடுவோம் என்ற நம்பிக்கையில் இந்த பெயரைச் சூட்டி விட்டார் போல
அவர் நம்பிக்கை பொய்த்து விடவில்லை விற்பனையில் நம்பர் 1.
நிறைய சுயமுன்னேற்ற புத்தகத்தில் கூறி இருப்பதைத்தான் கோபிநாத்தும் இதில் சொல்லி இருக்கிறார்.
இதை கோபுநாத் தனது முன்னுரையில் நான் இந்த புத்தகத்தில் புதிதாக ஒன்றும் சொல்லி விடவில்லை நான் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பயணங்கள் எனக்கு சொல்லித் தந்ததைதான் நான் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன் என்கிறார்.
கவலைப்படும் விசயங்களை தேடித்தேடி கவலைப்படும் நாம் சந்தோஷம் தரும் விசயங்களை தேடுகிறோமா? என்கிறார் இது உண்மைதான் பல நேரங்களில் கவலையைதான் தேடுகிறோம்.
சந்தோஷம் எதில்தான் இருக்கிறது? ரொம்ப சுலபம்.. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில் தான் அது இருக்கிறது.
நாம எந்த செயலை செய்ய தொடங்கும் போதும் அந்த செயலின் சாதக, பாதங்களை ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவன் என்ன நினைப்பான் என்றுதான் முதலில் யோசிக்கிறோம் என்கிறார்.
உண்மைதான்.
நாம என்ன செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் கண்டிப்பா இருந்துக்கிட்டுதான் இருக்கும்.
வெற்றியோ தோல்வியோ
நமக்கு எது சரியோ அதை செய்வதே சரி.ஏன்னா அதோட நன்மை தீமைகளை அனுபவிக்க போவது நாமதானே.
உங்களை ஊர் உலகம் நம்ப வேண்டும் என்றால் நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.
நம்மல நாமளே நம்புலன்னா எப்படி?
நாம ஒருவர் மீது அன்பு காட்டினால் அவரும் திருப்பி காட்டனும் என்று நிபந்தனை செய்தாலோ, நாம அப்படி யோசிச்சாலோ அது வியாபாரம் " அன்பு செலுத்துவதே ஆனந்தமான அனுபவம் என்கிறபோது அவர் திரும்பிச் செலுத்தினால்தான் சந்தோஷம் என்றில்லை.
நம் அன்பு உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் எதிர் தரப்பிலும் அப்படி இருந்துதான் ஆகவேண்டும் அதாவது அன்பு இருக்கும் என்கிறார்.
"எதிர்பார்ப்பில்லாத அன்பு இனிமையானது"
நம்மை பற்றி நாமே உயர்வாக எண்ணி, நமக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து தன்னம்பிக்கையிடன் நம் வாழ்வில் எப்படி உயரலாம் என்று
பதினைந்து அத்தியாயங்களில் இது போல நிறைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
புத்தகத்திலிருந்து சில;
நம் அக்கறை சிரிக்கக்கூடாது என்பதில் இல்லை…..உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.
இழந்ததைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு இருப்பதை கவனிக்கத் துவங்கினாலே நீங்கள் பழைய நிலைக்கு செல்லும் பாதையின் முதல் படியை தொட்டு விட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.
ஒரு வேலையை விரும்பிச் செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை.வருந்திச் செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது.
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க
தன்னம்பிக்கை 🔥🔥
நன்றி.
✍️ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி