Breaking News :

Wednesday, May 01
.

புத்தக விமர்சனம்: கச்சத்தீவு - ஆர்.முத்துக்குமார்


கச்சத்தீவு - ஆர்.முத்துக்குமார் |    Kachchatheevu - R.Muthukumar

 

                  நூல் : கச்சத்தீவு 

                ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார்

 

ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் " கச்சத்தீவை மீட்போம்னு " சொல்றாங்களே அப்படினா என்ன ? அதுல என்னதான் இருக்கு ? எதுக்கு தமிழக மீனவனர்களை இலங்கை காரங்க அடிக்குறாங்க, கொல்றாங்க ? இது மாதிரி இன்னும் பல கேள்விகள் எல்லார்கிட்டயும் இருக்கும். அதை பத்தி தெரிஞ்சுபோமே அப்டிங்கிறதுக்காக இந்த புக் வாங்கினேன்.

 

கச்சத்தீவு :

      கச்சத்தீவோட மொத்த சைஸ் 163 ஏக்கர் அப்படி பாத்த ஒரு சின்ன கிராமத்தோட சைஸ்தான் இருக்கும்.  இத்தனைக்கும் அங்க யாரும் வாழ்றதுக்கு தகுதியான இடம் கிடையாது.ஆனா அங்க ஸ்பெஷல் ஆன மீன்கள் நிறையவே இருக்கும் அதனாலதான் போட்டி ஆரம்பமாச்சு . இதுல இன்னொரு விஷயம்னு பாத்த யாரவது இந்தியாவை போர் தொடுக்கனும்னு நினைச்ச கச்சத்தீவு வழியா வர்றது ஈசியா இருக்கும். அதுமட்டுமின்றி போர் ஆயுதங்கள் வைக்கிறதுக்கும் விமானம் தரையிறங்கவும் கப்பல் நிறுத்துறதுக்கும் வாகா இருக்குற இடம்தான் கச்சத்தீவு.வெள்ளைகாரன் காலம் வரைக்கும் இந்தியாவை சேர்ந்தாக இருந்தது அதுகப்புறம் தீடிர்னு அவங்களுக்கு சொந்தமாயிருச்சுனு சொல்றாங்க ( ஆத்தா கனவுல வந்து இனிமேல் இதை நீயே ஹேண்டில் பண்ணுக்கனு சொல்லிட்டா போல )

 

 நீங்க என்ன நினைக்கிங்றீங்கனா இப்படி பட்ட இடத்தை ஏன் இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தது ?

சில பொதுநல அமைதி ( சுயநல ) அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது இத்தனைக்கும் ஒப்பந்தத்துல அவ்வளவு கிளியர்கட் ஆ எதுவுமே மென்சன் பண்ணல. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கோட்டுக்கு இந்த பக்கம் நீ வர கூடாது கோட்டுக்கு அந்த பக்கம் நா வரமாட்டேன் இந்த மாதிரி கோடு கூட சரியா சொல்லல. ( வாழ்க இந்திரா காந்தி அரசு )

 

ஒரு கட்டத்துல பிரச்சனை பெரிசா உருமாற ஆரம்பிச்சுருச்சு எப்படி சொல்லாம்னா முன்னாடி கடலுக்கு மீன் பிடிக்க போன மீனவங்களோட வலைய அறுக்குறது , அவங்கிட்ட இருக்குற பணத்தை ஆட்டைய ( வழிப்பறி ) போடுறது , பிடிச்ச மீனை அப்டியே மொத்தமா லவுட்டிகிறது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த அந்த  கடலோர காவல் படை கொஞ்சம் முன்னேறி மீனவங்களை அடிக்க ஆரம்பிச்சாங்க அதுகப்புறம் அடிக்குறது கொஞ்சம் போர் அடிக்கிறது என்கிற காரணத்தால் துப்பாக்கி கலச்சாரமும் அவர்களிடையே பரவி விட்ட காரணத்தால் யாரை பார்த்தாலும் சுட ஆரம்பித்தனர். அந்த கட்டதுலதான் LTTE அவங்கள வெளுத்து வாங்கின காலம்.

 

இந்த சம்பவங்கள் (வன்முறைகள்) ஒரு புறம் நடக்க மற்றொரு புறம்  மத்திய அரசுதான் இதை காதுல வாங்குற மாதிரி தெரியல நம்ம மாநில அரசு என்ன செஞ்சுனு பாத்த ஒன்னும் செய்யல. வழக்கம் போல் இலையும் சூரியனும் மாத்தி மாத்தி மாத்தி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விளையாடி  கொண்டிருந்தனர். ( வாழ்க தமிழக அரசு )

 

அந்த காடுவாசிக  சுடறதுக்கு சொன்ன மூன்று காரணங்கள் :  

1. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தாங்க அதனால சுட்டோம்.  ( மீனவர்கள் வந்ததுக்கான ஆதாரம் அந்த barbarien கூட்டத்துக்கிட்ட இல்லை ) 

2.நாங்க தமிழீழ விடுதலைப்புலிகள் தான் வராங்கனு நினைத்து சுட்டோம் ( கடலோர காவல்படை ஹெலிகாப்டரில் வந்து சுடுகிற அளவுக்கு வெறித்தனம் )

3. சுடுறது நாங்க இல்லை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துல இருக்குறவங்க. ( யாரவது சொந்த கூட்டுல  கல்லை எறிவாங்களா )

அதுமட்டுமில்லாம போரை நிறுத்தியே பல வருஷம் ஆச்சு ஆனா இன்னும் அவங்க சுடுறத  நிறுத்துற மாதிரி தெரியல.

 

இன்னொரு முக்கியமான விஷயம் என்னான International Sea Law என்ன சொல்றாங்கனா " ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பதற்காக  மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்தால் அவங்களை கைது தான் செய்யனும். " 

 

" இப்ப வரைக்கும் பாதிக்கப்படுறது என்னமோ கடலோர மீனவங்கதான். கைகட்டி நின்னு வேடிக்கை பார்க்கிறது மத்திய மாநில அரசு "


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.