டி.ராஜேந்தர் தமிழ்த்திரையில் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கியவர். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான அவர், இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, இசையமைப்பாளர், மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் பரிமாணம் கொண்டவர். பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர்.
இ்ந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த இருதயவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் டி.ராஜேந்தரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வரின் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சென்னை, போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.