தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் மொத்தம் 2,600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட வாக்களிக்கப்பட தகுதியுடைய உறுப்பினர்களாக 1,900 பேர் உள்ளனர்.
இந்த சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.
செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. உடனே அடுத்தடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு இயக்குநர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகின. இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 உட்பட 1,525 ஓட்டுகள் பதிவாகின.
இதில், மொத்தம் பதிவான வாக்குகள் -1,525. அதில், செல்வமணி பெற்ற வாக்குகள் -955, பாக்யராஜ் பெற்ற ஓட்டுகள் – 566. ஆக 389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர் கே செல்வமணி மீண்டும் இயக்குனர் சங்கத் தலைவராகிறார்.