ஏஎஃப்சி ஆசியக் கோப்பை முக்கிய போட்டிக்கு இந்திய அணி தகுதியடைந்துள்ளது.
கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளை சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி நன்றாக விளையாடுவதற்காக ரூ.16 லட்சம் செலவழித்து ஜோதிட நிறுவனத்தை அகில இந்தியக் கால்பந்து சம்மேளனம் நியமித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.