நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி, டில்லியில் வரும் 16ம் தேதி இரவு விருந்துடன் கூட்டம் ஒன்றுக்கு பாஜக தலைமை ஏற்பாடு செய்துள்ளது.
பாஜக எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு பங்கேற்று உரையாற்றுகிறார்.