Breaking News :

Sunday, April 28
.

உக்ரைன் போர் விவகாரம் - நெட்பிளிக்ஸ் தனது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியது 


ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் போர் தளவாடங்கள் மூலம் உருக்குலைய வைத்து வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவிற்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்யாவின் இத்தகைய தாக்குதலுக்கு, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து, பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.

இதற்கிடையே, புகழ்பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளோம் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ரஷ்யாவில் டிக்டோக் செயலி நிறுவனம், அங்கு அமல்படுத்தப்பட்ட புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.