தமிழகத்தில் 10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிமனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்தே எழுத வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், தனி மனித இடைவெளிவிட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.