மிழகம் மீது பா.ஜ.க, தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் சென்னையில் தமிழக பா.ஜ.க,விற்கு புதிய அலுவலகம் கட்டும் திட்டம் நடக்கிறது.
தற்போதுள்ள கமலாலயம் மிகச்சிறிய அலுவலகம். தவிர சரியான பாதுகாப்பும் இல்லை. எனவே புதிய அலுவலகம் தேவை என, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முடிவெடுத்துள்ளாராம்.புதிய அலுவலகம் கட்ட சுமார் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்காம். இதைக் கொண்டு சென்னையில், பிரதான பகுதியில் ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி அதை இடித்துவிட்டு, நான்கு மாடி கட்டடம் கட்டப் போகிறார்களாம்.
டெல்லி பா.ஜ.,க அலுவலகத்தில் இருப்பது போல, தமிழக அலுவலகத்திலும் உள்ளேயே கூட்டம் நடத்தும் வசதி, அனைத்து பிரமுகர்களுக்கும் அறைகள், வெளியூரிலிருந்து வரும் பா.ஜ.க, தலைவர்கள் தங்கும் அறைகள் என மிக பிரமாண்டமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது