பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 13) திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருச்சி பெல் தொழிற்சாலையை தனியாருக்கு விற்க முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன.
உற்பத்தியையும் குறைத்து விட்டார்கள்.
பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லை எனில் அதன் பங்குகளை மாநில அரசு வாங்க வேண்டும் என்றார்.