Breaking News :

Monday, September 16
.

திமுக கட்சியில் 9 அமைச்சராக இருப்பவர்கள் அதிமுக அமைச்சர்கள் - அர்ஜுன் சம்பத்


சென்னை வள்ளுவர் கோட்டம் சாலையில் இந்து மக்கள் கட்சி சார்பாக தமிழகம் இந்துக்களின் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக தேவநாதன் வின்டிவி இயக்குனர் கலந்து கொண்டார் 

தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் ஆதி திராவிட ஆட்சி இந்து தமிழர்களை தொடர் வஞ்சிக்கும் வகையில் நடந்து வருகிறது  இவர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக மாண்புமிகு முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் மற்றும் மத்திய அரசு கவனத்தில் ஈர்க்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பாக ஒரு நாள் உண்ணாவிரத அறப்போராட்டம் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்

1) 30.மற்றும் 40. ஆண்டுகளாக இந்துக் கோயில்கள் தெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்

 இந்நிலையில் இந்து கோவில்களை  இடித்துத் தரைமட்டமாக்குவது எந்த வகையில் நியாயம் ஆக்குவது 

 நீர்நிலைகள் இருக்கும் இடங்களை ஆக்கிரமிப்பு குறித்து இடங்களில் இடிப்புக்காக என்றும் இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கும் 

ஆனால் பழமையான கோயில்களை அகற்றுவது வேறு நிபந்தனைகளை உட்பட்டு கோயில்களை நீதிமன்றங்கள் மூலம் வழி நடத்த வேண்டும் 

அதற்காக இந்து மக்கள் பக்தர்கள் புண்படும் வகையில் திமுக நடந்து கொள்வது நல்லதில்லை பக்தி உள்ள பக்தர்களுக்கு  நாங்கள் உறுதுணையாக இருப்போம் எனவும்  

தமிழக முதல்வர் கவனத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தேசிய லீக் கட்சி கள் முக்கியமாக விசிக வன்னியரசு மற்றும் தேசிய லீக் கட்சியில் தடா ரஹீம் ஆகியோர் இந்து மக்களையும் இஸ்லாமிய மக்களையும் மதத்தின் அடிப்படையில் தூண்டுதல் காரணமாக அடி வைக்கின்றனர் இதற்காகவே தமிழக காவல்துறை தலைமை டிஜிபி அலுவலகத்தில் புகாரின் அடிப்படையில் தேசிய லீக் கட்சியில் தடா ரஹீம்யை இரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆதலால் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தேசிய லீக் கட்சிகள் ஆகிய இரு கட்சி அமைப்புகளும் அரசு தடை செய்ய வேண்டும் எனவும் 

ஹிஜாப் அணிந்து வருவது அவரவர்கள் விருப்பம் ஆகும் மேலும் நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் இந்துக்களுக்கு எப்படி காவித்துணி முக்கியமோ அது போன்று இஸ்லாமியர்கள் பெண்களுக்கு 
ஹிஜாப் முக்கியம் என்பதும் என்றும் ஆதரவாக இருப்போம் என்றும்

இந்த உள்ளாட்சித் தேர்தல் செல்லுபடியாகாது என்றும் திமுக ஆட்சியில் தவறாக பயன்படுத்தி உள்ளனர் எனவும் பணத்தாலும் பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் களத்தில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வைப்பது போன்று திமுக அரசு அராஜகத்தில் ஈடுபட்டனர் இந்த  தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் ஆணையம் இவை அனைத்தும் ரத்து செய்து மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும்

லாவண்யா மணவின் பெற்றோர் அழுகைக் குரலுக்கு மாண்புமிகு திமுக முதலமைச்சர் செவி சாய்ப்பது இல்லையே ஏன் எனவும்

மதத்தின் அடிப்படையில் மனிதாபிமானம் முறையில் நடந்து கொள்ள வேண்டுமென  அப்துல் கலாம் என்கிற மாணவனுக்கு வீடு வழங்கி உள்ளார் இது நியாயமே இல்லை என்றும்  திமுக அழிவதே எஸ்டிபிஐ கட்சி மூலம் தான் என்றும் காவல்துறை ஒரு ஏவல் துறையாக தான் செயல்பட்டு வருகிறது என்றும் பொய் வழக்குகளால் பாஜக மற்றும் அதிமுக மீது வஞ்சிக்கும் வகையில் நடந்து கொள்வது முறையல்ல என்றும் எஸ்டிபிஐ கட்சி மற்றும் விசிக திமுக வால் ஆதாயம் தேடுகின்றனர் என்றும் 

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் குயின்ஸ் லேண்ட் நிலம் குறித்து பஞ்சாயத்து செய்து வருகிறார் என்றும் கோயில் நிர்வாகத்தில் வேலை பார்க்கும் கோயில் நிர்வாகியை மிரட்டுவதும் அமைச்சருக்கு அழகை இல்லை எனவும் திமுகவில் தற்போது இருக்கும் 9 அமைச்சர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் அமைச்சர்கள் தானே செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு என்பவர்கள் யார் ? அதிமுகவில் இருந்தவர்கள் தானே  என்று செய்தியாளர் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.