முதல்வரின் சில நிமிட பிரச்சாரம்.. சிரமத்தை சந்திக்கும் மக்கள் - அண்ணாமலை விமர்சனம்.
என் பேரன் விஜய்யை பார்க்க முடியல - மெர்சல் நடிகை சிட்டுக்குருவி பாட்டி வேதனை
மதுரைக்கு முதல்வர் விஜய் வந்திருந்த போது அவரை நேரில் பார்க்க முடியவில்லை என சிட்டுக்குருவி பாட்டி வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் எனது பேரனை பார்க்க வேண்டும் என ரொம்ப ஆசைப்பட்டேன், ஆனால் முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் துணை நடிகையாக நடித்து வருபவர் சீனியம்மாள். மெர்சல் படத்தில் சிட்டுக்குருவி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்ததால் சிட்டுக்குருவி பாட்டி என்றும் அழைக்கப்படுகிறார்.
மதுரையை சேர்ந்த இவர் வானத்தை போல, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் மெர்சல் திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அது போல் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிட்டுக்குருவி பாட்டி நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய் நேற்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், புனரமைக்கப்பட்ட காந்தி மியூசியம் உள்ளிட்ட நிகழ்வுகளை தொடங்கி வைப்பதற்காக மதுரைக்கு வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்ட முதல்வர் விஜய், மாலை 4.15 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்றிருந்தார். அங்கு ஒரு மணி நேரம் தரிசனத்தை முடித்துக் கொண்டு இரவு சென்னை வந்து சேர்ந்தார்.
இந்த நிலையில் சிட்டுக்குருவி பாட்டி, முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: "என் பேரன் விஜய் முதல்வராக இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
என் பேரனைப் பார்க்க வேண்டும் என ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் வர முடியவில்லை. எப்படியாவது என் பேரனை பார்க்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. அடுத்த முறை அவர் மதுரை வரும் போது நான் அவரை நேரில் பார்க்க வேண்டும் என சிட்டுக்குருவி பாட்டி தெரிவித்துள்ளார்.
அது போல் கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகையும் பாடகியுமான டி.கே. கலா முதல்வர் விஜய்யை சந்திக்க சென்னை பனையூருக்கு சென்ற நிலையில் அவரிடம் அப்பாயிண்ட்மென்ட் இல்லாததால் அவரை பாதுகாவலர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் கலா ஏமாற்றத்துடன் சென்றார்.