ஜெம் வீரமணி: 500 கோடி பேரம்.. ஸ்டாலின் என்ன செய்தார்- சிடிஆர் கேள்வி!.
"நான் எப்போது பிறந்தால் உங்களுக்கு என்னய்யா?" - விஜய் ஆவேச பேச்சு
திமுக முன்பு செய்த ஊழல்களை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்து செல்லவே முந்தைய ஊழல்களை எல்லாம் குறிப்பிட்டதாக தெரிவித்த விஜய், திமுக விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் திசைதிருப்பும் வேலையையே செய்வதாக சாடியுள்ளார். மேலும், மக்கள் காசை நாங்கள் தொட மாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் மரகதம் குமரவேல். இருப்பினும், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமான நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதே மதுராந்தகம் தொகுதியில் அதே மரகதம் குமரவேல் இந்த முறை தவெக சார்பில் போட்டியிடுகிறார்.
அவருக்காக இன்று பிரச்சாரம் செய்த விஜய், "அனுபவம் அனுபவம் என சொல்லி மக்கள் காசை கொள்ளை அடித்தவர்கள் ஆட்சிக்கு வரலாமாம்.. ஆனால், நம்மை போல சாதாரண குடும்பங்களில் சாமானிய மக்கள் ஆட்சிக்கு வரக்கூடாதாம். விஜய் ஆட்சி வந்துவிட்டால் ஊழல் செய்ய முடியாது.. மக்கள் காசை தொட முடியாது. அப்படி தொட்டால் மாட்டிக் கொள்வோம் என தெரியும். இதை தடுக்கவே இரு கழகங்களும் மாறி மாறி திட்டம் போட்டு வருகிறார்கள்.
ஐயுஎம்எல் கட்சியினர் இதை தான் சட்டசபையில் பதிவு செய்திருதனர். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இதை தான் குறிப்பிட்டனர். மக்கள் காசை நாங்கள் தொட மாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம். அதனால் தான் சட்டசபையில் அந்த காலத்தில் திமுக செய்த ஊழல்களை எல்லாம் சொன்னோம். ஊழலின் உற்றுக்கண் யார் என்பதை இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை அல்லவா! அதனால் தான் அந்த காலகட்டத்தில் நடந்த ஊழல்களை எல்லாம் எடுத்து சொன்னேன்.
இதையெல்லாம் நான் பேசினால் விஜய் அப்போது பிறக்கவே இல்லை என்கிறார்கள். நான் எப்போது பிறந்தால் உங்களுக்கு என்னய்யா? வரலாற்றை எடுத்து படித்து பார்த்தாலே உங்கள் வண்டவாலம் தண்டவாளம் எல்லாம் தெரிந்துவிடும். திமுக மூலம் ஊழல் முன்னாடியே பிறந்துவிட்டது. நான் எப்போது பிறந்தால் உங்களுக்கு என்ன?
சட்டசபையில் ஒரு பேட்டர்னை கவனித்து இருப்பீர்கள். ஏதாவது ஊழலை பற்றி பேசினால் உடனே ஆதாரத்தை காட்டு என்பார்கள். ஆதாரத்தை காட்டினால் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட வேண்டும் என்பார்கள். அதற்கு நாம் எதாவது பேசினால் நீதிமன்றத்தில் விசாரணையில் இப்பதால் அது குறித்து பேசக்கூடாது என்பார்கள். அதை தாண்டி பேசினால் கூச்சல் போட்டு குழப்பிவிடுவார்கள்" என்றார்.