பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது - முதல்வர் விஜய் அதிரடி

paranthur-airport-place-cancelled-tvk-cm-vijay
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது - முதல்வர் விஜய் அதிரடி

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகவும், புதிய விமான நிலையம் அமைக்க மாற்று இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடக்கத்திலிருந்து பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர்.. இது பற்றி எந்த அறிவிப்பும் கடந்த 3 மாதங்களாக வெளியாகவில்லை. அப்படியெனில், புதிய விமான நிலைய திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆதரவாக இருக்கிறாாரா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் விஜய் அறிவித்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் அவர் பேசியதாவது, "மீனம்பாக்கம் விமான நிலையம், இந்திய விமான நிலைய ஆணையத்தால் இயக்கப்படுகிறது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 30 விமானிகளை கையாளும் திறன் கொண்டது. வளர்ந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், அவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டும், தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது.

இருப்பினும் புதிய விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்படும் இடம், அதிக அளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும், அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், முந்தைய அரசு விவசாயிகளை அதிக அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டது.

ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையத்தை அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டத்தை அறிந்து.. நான் 20.01.2025 அன்று அப்பகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தேன்.

சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். விவசாயிகளே நான்டின் முதுகெலும்பு. விவசாய நிலங்களை பாதுகாக்க மக்கள் போராடி வருகிறார்கள்.

விக்ரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையத்தின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். வளர்ச்சிக்கு முழு ஆதரவு உண்டு. ஆனால், பரந்தூரில் இந்த திட்டம் அமைய கூடாது. அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். குறைந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும் மக்கள் அதிகம் பாதிக்கபடாத இடத்திலும் விமான நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நான் தெரிவித்திருந்தேன்.

மக்கள் மத்தியில் நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு.. புதிய விமான நிலையம் அமைத்தது குறித்து உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதன்படி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் கைவிடப்படும். புதிய விமான நிலைய திட்டத்திற்கான நிலம் விரைவில் தேர்வு செய்யப்படும்" என்று கூறியிருக்கிறார்.