தாம்பத்யம் பற்றிய கதை - எழுத்தாளர் ஜெயகாந்தன்
இக்கதையைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இதனை இயற்றியிருப்பது திரு ஜெயகாந்தன் அவர்கள். இந்த கதையின் மூலம் பிளாட்பாரத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் முறையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார்.
எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து பிழைக்கப் பட்டிணம் வந்தவர்களுக்குத் தங்கும் இடமாக இருபது இந்த பிளாட்பாரம் தான். இந்த இயந்திர உலகில் காலை நேரங்களில் எவரும் கண்களுக்கு அவ்வளவாகப் படுவதில்லை. ஏனெனில் அவர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் ஏதாவது கூலி வேலை செய்துதான் பிழைப்பை நடத்துகின்றனர்.
ஆனால் இரவு நேரங்களில் பிளாட்பாரத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்களாக விழுங்குகின்றனர் இந்த பட்டிணத்திற்குப் பிழைப்பைத் தேடி ஊரைவிட்டு இருக்க இடம் கூட இல்லாமல் இந்த பிளாட்பாரத்தை நம்பி.
இங்கு இந்த கதையும் அப்படிப்பட்ட ஒன்று தான் மருதமுத்து ஒரு கூலித் தொழிலாளி, அவனது வேலை மூட்டை சுமப்பது, இவனே கதையின் நாயகன். நாயகி ரஞ்சிதம், இவளும் தன் அப்பாவுடன் கிராமத்திலிருந்து பட்டிணம் பிழைக்க வந்தவள். ஆனால் வந்த குறுகிய காலத்தில், அவளது அப்பா இறந்து போகவே, அவள் அனாதையாக இந்த பட்டிணத்தில் பிளாட்பாரத்தில் தன் வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
அவ்வப்போது அவள் தன் தந்தையின் நினைவில் கடந்து வாடும் போது, அவளுக்கு நான் இருக்கிறேன் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியது கதையின் நாயகன் மருதமுத்து தான். இங்கு ஆசிரியர் ஒன்றை தெரியப்படுத்தியிருப்பார். அதாவது தற்காலத்தில் மிகவும் பாப்புளராக மக்கள் மத்தியில் காணப்படுவது லிவிங் டுகெதர் என்ற கான்செப்ட். ஒரு ஆண்மகனுக்கு ஒரு பெண்ணுடன் விருப்பம் இருந்தால், இருவரும் ஒற்று போனார்களேயானால் அவர்கள் இந்த லிவிங் டுகெதர் என்ற கான்செப்ட் முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.
இங்கு மருதமுத்து அவளிடம் நான் இருக்கிறேன் என்று கூறிய பிறகு இதே அந்த பிளாட்பாரத்தில் தான் அவனுக்கு இரவு உணவு எல்லாம் ரஞ்சிதம் வழங்குவாள். ஆனால் ஒன்றில் மட்டும் பிடிவாதமாக ரஞ்சிதம் இருந்துவிட்டால், கூரை புடவை, தாலியைக் கடவுள் முன் கட்டிய பிறகு மற்ற எல்லா சம்பிரதாயங்களும் எல்லாம் என்று அவள் மருதமுத்துவிடம் கூறிவிட்டாள்.
அதனால் அவன் தினமும் கூலி வேலைக்குப் போய் திரும்பும் போது அவன் அன்று சம்பாதித்த பணத்தை ஒரு சிறிய பகுதியை அந்த பிளாட்பாரத்தில் ஓரத்தில் இருக்கும் சாயபு கடையில் கொடுத்து வைத்திருந்தான் . ஏன் என்றால் அவனிடத்தில் இருந்தால் அந்த பணமானது செலவாகிவிடும் என்று யோசித்து சாயபு கடையில் கொடுத்துவைத்திருந்தான். அவன் தினமும் சிறுக்கச் சிறுக்கச் சேமித்த பணத்தைக்கொண்டு ரஞ்சித்தைக் கைப்பிடித்தான்.
ரஞ்சிதம் எண்ணிய மாதிரி ஒரு புதிய கூரை புடவை, தாலியுடன் ஒரு சன்னிதியில் வைத்து அவளைக் கைபிடித்தான் மருதமுத்து. அன்று இரவு உணவு வெகு விமர்சிக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. ரஞ்சிதம் கட்டின புதிய தாலி, புடவையுடன் சமைத்துக்கொண்டிருந்தாள். மருதமுத்து அவள் காது மடல் அருகில் வந்து இப்போது என்ன சொல்லப் போகிறாய்? என்றான். அதான் திருமணம் ஆகிவிட்டது என்று கூறினான்,
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் ரஞ்சித்திற்கு ஒரே மகிழ்ச்சி பொறுக்க முடியாமல் தன் முந்தாணியால் அவளது முகத்தை அவளே மூடிக்கொண்டு புன்னகைத்தாள். இனி நான் என்ப சொல்ல? சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என்று கூறிவிட்டு அடுப்பு வேலையில் மும்மரமானாள். அவள் சமைத்த உணவை இருவரும் உண்டனர், மருத முத்து அவளிடம் நான் அந்த பார்க்கில் இருக்கும் ஒரு ஒத்துக்குப்புறமாக்க ஒரு பெஞ்ச் இருக்கிறது நான் அங்குக் காத்திருக்கிறேன் என்றான்.
அவளும் எல்லா வேலை களையும் முடித்துவிட்டு அவர்கள் இருக்கும் பிளாட்பாரத்தில் இரு மூலையில் அவர்களது தட்டு மொட்டுச் சாமான்களை எல்லாம் அடுக்கிவைத்துவிட்டு மருதமுத்து சொன்ன இடத்தருக்கு வந்து நின்றாள். அவள் வந்தது அவனுக்குத் தெரிந்திருந்தும் அவன் ஒன்றும் அறியாதவன் போல் தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த தூங்கிய மாதிரி அவளிடம் பாவனையாக நடித்தான். ஆனால் அவள் அவன் நடிக்கிறான் என்று கண்டு பிடித்துவிட்டாள் எப்படி அவனது கை விரல் இடுக்கில் சிகரட்டின் வெளிச்சம் மற்றும் அந்தனிலிருந்து வரும் புகையையும் வைத்துத்தான். பிறகு அவள் சிரிப்பதைப் பார்த்து அவனும் சிரித்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் வெற்றிலை வாயில் போட்டிருந்தாள். இவனும் அவளிடம் வெற்றிலை கேட்டு வாங்கி தனது வாயில் போட்டுக்கொண்டான். அவனது கண்களுக்கு அவளது சிவந்த உதடு ஒரு வகை கிளர்ச்சியை மனதில் உண்டுபன்னவே இருவரும் நெருங்கினர் அந்த இருள் சூழ்ந்த இடத்தில். ஆனால் மணி அப்பாது பத்துதான் இருக்கும், இன்னும் மனித நடமாட்டம் இருந்தது குறிப்பாக, அந்த பார்க் எதிரே ஒரு ஹோட்டல் இருந்தது அது இன்னும் மூடாமல் இருந்தால் அங்கு மனித நடமாட்டம் காணப்பட்டது. அதில் இருவர் இவர்கள் காது படப் பேசினர் பார்க் ரொம்ப நாஸ்டி யாப் போச்சு என்று பேசிக்கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் மனச் சங்கடமாகப் போய்விட்டது. அதுவும் அவளுக்கு அதிகம், ரஞ்சிதம் தன் மச்சானிடம் நாம் பேசாமல் நமது கிரமத்திலே இருந்திருக்கலாம். நமக்கென்று ஒரு குடிசையாவது இருந்திருக்கும். நாமும் கௌரவமாக அதில் குடித்தனம் நடத்தியிருக்கலாம். இப்படியா பிளாட்பாரத்தில், கல்யாணம், குடித்தனம், பிள்ளை குட்டிகள், இதே தெருவில் அல்லது பிளாட்பாரத்தில் செத்தும் போரது என்று சலிப்புடன், வெறுப்புடன், துயரத்துடன், ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் முனகிக்கொண்டாள் ரஞ்சிதம். மருதமுத்து அவளிடம் அவரவருக்கு என்ன தலையில் எழுதியிருக்கிறதோ அதன்படி தான் நடக்கிறது என்று அவளைச் சமாதான் செய்தான்.
பார்க் எதிரே உள்ள ஹோட்டலில் சற்று மனித நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது மணி பன்னிரண்டு இருக்கும். இவர்களுடன் தெருவில் பிளாட்பாரத்தில் உள்ளவர் ஒருவர் பின் ஒருவராகத் தூங்க ஆரம்பித்தனர்.
இப்போது மருதமுத்து ரஞ்சிதத்தை நெருங்க முற்பட்டான். அப்போது அவர்கள் முகத்தில் காரலிருந்து வெளிச்சம் இவர்கள் மீது அடித்தது. இருவரும் விலக்கிக்கொண்டனர். மருதமுத்து என்ன இந்த கும்பல் என்று பார்த்த போது, அவனுக்குப் புலப்பட்டது அப்போது மூன்றாம் ஆட்டம் முடிந்து மினர்வா திரை அரங்கிலிருந்து மக்கள் வந்துகொண்டிருந்தனர்.
மேலும் அவரவர் தனியாகப் படுத்துக்கொண்டனர் ஊர் முழுவதுமாக அடங்கிவிட்டது அனைவரும் அவரவர் வீட்டில் தூங்குகின்றனர். இப்போது மருதமுத்து அவளை நெருங்கினான் இருவரும் பேசிக்கொண்டு இணக்கமாக இருந்த வேளையில் டக் டக் டக் என்று பூட்ஸ சத்தம் கேட்டது இவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. யாரது வெளியே வாம்மே என்று போலீஸ்காரன் உறுமினான்.அவள் தன் புடவையை எல்லாம் சரி செய்துவிட்டு இருவரும் அந்த இருட்டிலிருந்து வெளியே போலீஸ்காரன் இருக்கும் இடத்திற்கு வந்தனர். மருதமுத்துவை பார்த்து யார் நீ என்றான் போலீஸ்பாரன், அதற்கு மருதமுத்து நான் ஒரு கூலி வேலை செய்யும் தொழிலாளி என்றான்.
மேலும் போலீஸ்காரன் யாரும்மே நி வெளிச்சத்திற்கு வாம்மே என்றான் போலீஸ்காரன். அவன் நடுங்கிக்கொண்டு வந்தாள். நெற்றியில் திலகம் கலைந்து, கூந்தல் அவிழ்ந்து, தலையில் வைத்திருந்த பூ சிதைந்து சிதறிக் கிடந்தது. எம்மா இங்குதான் இடமா? ஒம் பேர் என்னாம்மே? என்றான் குழப்பத்தில் அவள் ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றால். போலீஸகாரன் அவளிடம் ஸ்டேஷன் வந்து அவன் மீது ஒரு கம்ப்ளைன்ட் கொடு இவன் தான் என்னை கூப்பிட்டான் என்று. உன்னை விட்டுவிடுகிறோம் என்றான். அப்போது தான் அவளுக்குப் புரிந்தது. அவள் போலீஸ்காரனிடம் சார்
நாங்கள் கணவன் மனைவி, இன்று தான் திருமணம் முடிந்தது என்று சொல்லி தாலியைக் காண்ட்டினால்.
ஆனால் அந்த போலீஸ்காரன் அதையெல்லாம் நம்பவில்லை. அதையெல்லாம் ஸ்டேஷனில் பேச்சிகளாம் அவளைத் தள்ளினான் போலீஸ்காரன். ரஞ்சிதம் கெஞ்சினாள், தன் கணவனின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.
ஆசிரியர் இப்படி முடித்திருப்பார். போலிஸ்காரனின் பூட்ஸ்களின் சப்தம் டக் டக் என்று ஒலித்தது ரஞ்சிதத்திற்கு தன் ஹிருதயத்தில் யாரோ மிதிப்பது போல பக் பக் என்று நெஞ்சு துடித்தது. எதன் மீதோ மிதித்து நசுக்கி நடந்து செல்லும் சட்டத்தின் காலடியோசை அதோ டக் டாக்..டாக்..டக்..
-பாலமுருகன். லோ-