வெட்கத்தில் குளித்த வியர்வைகள்..

love-kavithai-affection
வெட்கத்தில் குளித்த வியர்வைகள்..

நீ ஏர் பூட்டிக்கொண்டு
வா...
நான் என்னை உழுகிறேன்..
நீ ஏன் பூட்டிக்கொண்டு
வந்தாய்...மனமே
நான் திறந்து கிடக்கிறேன்...
இருபெருங்கறைகள்
நீ துடைத்து வெளுத்திட..
கரையுடைத்த நீரும்
நானும் உடையுடுத்திட...
அழுக்குமரமொன்று
அன்றுன்னை கண்டதிலிருந்து..
ஆமைக்குளமின்று
என் ஓட்டுக்குள் உன்னுருகொண்டு..
மஞ்சள் கனவில்
மார்பில் மாலைகள்...
நூலின் மறுபுறத்தில்
மன்மதன் பார்வைகள்....
நெற்றி அலங்கரித்த
உன் விரல் கோலங்கள்...
கூரைப்புடவை கட்டி
வெட்கத்தில் குளித்த வியர்வைகள்..
ஊரே கூடியிருக்க
நீ மட்டும் அருகிருந்த நிமிடங்கள்..
யார் யாரோ கண்வைக்க
உன் கண்ணுக்குள் நானிருந்த
மணித்துளிகள்...
பச்சை வாழையிலையில்
இரு பட்சிகள் பசியான கணங்கள்..
அமர்ந்து இடித்துக்கொண்டு
இடம் கேட்ட கன்னங்கள்.....
மாற்றி மாற்றி படமெடுக்க
தோளில் கைபட காரணமான காரணிகள்...
கத்தி முனையில் கடந்து போன
ஒருதலைகாதலின் பார்வைகள்...
அத்தனையும் களைந்திருவோம்..
நீ வா என்னை கவனி...
இன்று முதல் நான் தான்..
உன் கழனி..
பருவத்தே பயிர் செய்..
முத்தங்களை விதை..
நெற்றி வியர்வை கொடு..
குனிந்து நிமிர்ந்து இடுப்புடை..
கோவணம் போதும்..
வேண்டாமே மற்ற உடை...
மழை பெய்த மூன்றுநாள்
மத்தளம் மட்டும் வாசி..
மீண்டும் அடைமழை கேட்குமிடை
அதுவரை நீயாகு சன்னியாசி..
இப்போது யோசி..
நிலம் காத்திருக்கிறது..வா
என்னை நேசி...
.
- இயலிசம்