நான் உன்னை காதலிக்கிறேன்..
நீ சொன்னவொரு
வார்த்தையத்தான்
என் கவிதைக்குள்ள
ஒழிச்சு வைச்சேன்..
உன்ன நெனச்சு ஏட்டுலயும்
உன் பெயரை எழுதிவைச்சேன்
ஏட்டிலயும் எறும்பு ஊற
என்னை நானே திட்டிக்கிட்டேன்
எங்கே உனக்கு நோகுமோன்னு
என் கண்ணோரம் நீர் பூத்து சிரிச்சேன்..
வானவில்லின் ஓரம் தொட்டு
வண்ணமையிட ஆசப்பட்டேன்
உன் நிழலின் அழகினிலே
வானவில்லை நானும் கண்டேன்..
வார்த்தையிலே அற்புதமடி நீ
வாக்கியத்தில் அதிசயமும் நீ
வரிகளில் வாழ்கிறாய் நீ
வலிக்கிறதெனக்கு
ஒருமுறை
முகம் காட்டிப் போ
நீ....
உன் பெயர்
உச்சரித்தே
உயிர் வாழும்
உயிர் கரைந்தாலும்
உன்னையே நினைக்கக்கூடும்...
கூடுமானவரை கூட்டிப்போ
கூட்டுக்குள் ஆசை கூட்டிப்போ
கூடிப்பேசிட கூடிடுமோ
கூடி வாழ கூடிடுமோ...
சாதிக்கொரு சங்கம் வைத்து
வயிற்வளர்த்தார்
நம் வாழ்க்கையை
வார்த்தைகளோடே வாழவைத்தார்...
இனியொரு காலம்
நாம் பிறப்போம்..
காட்டில் கவரிமானாக
பிறப்பெடுப்போம்..
நானாக நானில்லை
இப்போது
நீயின்றி
நான் வாழக்கூடாது...
..இயலிசம்...