மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது?

wife-husband-expectations
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது?

அவங்க எதிர்பார்ப்பு எல்லாமே ரொம்ப சிம்பிளா தான் இருக்கும்.

நாம தான் ஏதோ பெரிய பெரிய விஷயத்தை நெனச்சிகிட்டு இருப்போம்..ஆனா அவங்க எதிர்பார்ப்பது.

முதல நம்பிக்கை மற்றும் அன்பு தான்
எல்லாவற்றிலும் நம்பிக்கை கொடுங்கள் நம் துணையிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும்.

அன்பு கொடுப்பதில் கர்ணனுக்கு அப்பனாக இருக்க வேண்டும்…
அடுத்து அவங்க எதிர்பார்க்கிறது.

அரவணைப்பு..அவர்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து இருப்பார்கள்.

நம்ம வீட்டில் அவர்கள் உள்ள கால சூழ்நிலை தெரிய சில காலம் ஆகும் அதுவரை அவர்களை குழந்தை போல அரவணைத்து இது அப்படி அது இப்படி என்று சொல்லி கொடுத்து அரவணைக்க வேண்டும்..

அடுத்து

விட்டு கொடுத்தல்…யாருக்கு விட்டுகொடுக்கிறோம்..நம்முடைய துணை தானே என்று எண்ணுதல் வேண்டும்.. விட்டு கொடுப்பவர்கள் யாரும் கெட்டு போனதாய் சரித்திரம் இல்லை.

அதுக்கு அப்பறம் டெய்லியும் அவங்க நம்ம கிட்ட எதிர்பார்ப்பது…

• காலையில நமக்கு காபி கொடுக்கும் போதே…நீ காபி குடிச்சிட்டியா பேபினு கேக்கனும்…

• சாப்பிடும்போது சமையலை பாராட்ட வேண்டும்…தயவு செய்து யாருடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்..(பத்திரகாளி போல கோவம் வரும்)

• எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கனும்

• ஆபிஸ் போகும் போது போயிட்டு வரேன் குட்டிமா அல்லது சின்ன பிலையிங் கிஸ் ஒன்று கொடுக்கனும்..

• ஆபிஸ் ல இருக்கும்போது மதியம் போன் பண்ணி சாப்பிடியனு கேக்கனும்..

• ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வரும்போதே உனக்கு ஏதாவது வேணுமானு கேக்கனும்…எதுவும் வேணாம் சொன்னாங்க அப்படினா, மல்லிப்பூ மட்டும் வாங்கி வரலாம்..

• வீட்டுக்கு வந்து உடனே போனை தூக்கி எறிந்து விட்டு அவங்க கிட்ட மனசு விட்டு பேசணும்..

• சமைக்கிற அப்போ ஹெல்ப் பண்ணனும்..

• துணி துவைக்கும் போதும் தான்..

• முக்கியமான ஒன்னு தலை துவட்டி விட்டு துண்டை அப்படியே கண்ட இடங்களில் போடாமல் கொடியில் போட்டு வரணும்…

• சாக்ஸ் கழட்டி கண்ட இடத்தில் போடாமல் துவைக்க போட இடத்தில் வைக்க வேண்டும்..மதியம் சாப்பிட பாத்திரத்தை ஆபிஸிலே கழுவி விட வேண்டும்..

• எக்காரணத்தை கொண்டும் பொண்டாட்டியை அடிக்க கூடாது....

• அவர்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்..

• அவர்கள் கனவுக்கு உதவுங்கள் திருமணம் முடிந்த பிறகு படிக்க வேண்டும் என்று சொன்ன படிக்க வைங்க..