Breaking News :

Saturday, June 10

ஐப்பசி மாத சிறப்புகள்

🌹 ஐப்பசி மாதம் அடை மழைக் காலம். அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள் ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற் கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.

🌹 இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப் படுகிறது.

🌹 காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள் ளப்படுகிறது.

🌹 முருகப்பெருமானை நினைத்து மேற் கொள்ளும் முக்கிய விரதமான ஸ்கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.

🌹இம்மாத பௌர்ணமியில் எல்லா சிவா லயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

🌹கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, ரமா ஏகாதசி, தேவுதான  ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

🏵️தீபாவளி பண்டிகை  (24.10.2022)

🌹தீபாவளி இந்தியா முழுவதும் கோலாக லமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையா கும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பி றை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவி லும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

🌹 இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லஷ்மி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

🌹இப்பண்டிகையின்போது நல்லெண் ணெய் தேய்த்து நீரில் மக்கள் நீராடுகின்ற னர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.

🌹 புதிய ஆடைகளை அணிந்து கோவில் களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.

🌹 புதுமணத்தம்பதியர் தலைதீபாவளி யை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டா டுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.

🏵️ கந்த சஷ்டி திருவிழா !
     (25.10.2022 to 31.10.2022)
இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகி றது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப் பது ஆகும்.

🌹 நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆண வம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரம்பில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களை ப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடி க்கப்படுகிறது.

🌹 இந்தவிரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.

🌹 எல்லா முருகன் கோவில்களிலும் இவ் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண் டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.

🌹 ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

🌹இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.

🌹இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும்.

🏵️அன்னாபிஷேகம் (08.11.2022)

🌹ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்க ளில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்ன த்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

🌹தானங்களில் போதும் என்ற மனதிருப்தி யை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளி க்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர் ணமியில் அபிஷேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

🌹வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் இட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட் டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதி யில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது.

🌹 ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்ன மானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.

🌹அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது.

🌹 அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்க ளிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

🌹 ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி தரித்திரம் ஒருபோதும் ஏற்படாது.

🏵️ துலா ஸ்நானம் (18.10.2022 முதல் ஐப்பசி மாதம் முழுதும்)

🌹 ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.

🌹துலா ஸ்நானம் நிகழ்வு ஸ்ரீரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பாகக் கருதப் படுகிறது.

🌹 காவிரியில் துலா ஸ்நானம் செய்தால் நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோ ர்களின் பாவங்கள் நீங்குகின்றன.

🌹 அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப் பேறு ஆகியவற்றை துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது.

🌹 ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறை யில் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்றழைக்கப்படுகிறது.

🏵️ தனத்திரயோதசி (23.10.2022)

🌹 ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோத சி தனத்ரயோதசி என்றழைக்கப்படுகிறது.

🌹 அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லஷ்மிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

🏵️ யம தீபம் (23.10.2022)

🌹 ஐப்பசி மாதத்தில் தேய்பிறை த்ரயோத சி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில்  (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.  
மற்றும் பித்ரு தேவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

🏵️ தன்வந்திரி ஜெயந்தி (22.10.2022)

🌹ஐப்பசி மாதத்தில் தேய்பிறை த்ரயோதசி அன்று த்ரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே த்ரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.

🏵️ யமத் துவிதியை (26.10.2022)

🌹 ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யம துவிதியை என்றழைக்கப்படுகிறது. யம துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும்.

🌹 எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

🌹 இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.

🏵️ கோவர்தன தினம் (26.10.2022)

🌹 ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று ஸ்ரீகிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார்.

🌹  கோவர்த்தன ஸ்ரீகிருஷ்ணரை வழிபட நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.

🏵️ கோவத்ச துவாதசி (21.10.2022)

🌹 ஐப்பசி மாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்சியுடன் இருப்பார்கள்.

🏵️ முருகனின் சுக்ரவார விரதம் !

🌹  முருகப்பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

🌹 நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது.

🌹 நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும்.

🌹 முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

🌹 இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

🏵️ கேதார கௌரி விரதம் (24.10.2022)
  
🌹 இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர் பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத் தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

🌹 இவ்விரதமுறையைப் பின்பற்றியே அம்பிகை சிவபெருமானின் இடப்பாக த்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

🌹 இவ்விரத முறையில் அதிரசம் என்ற பொருள் பிரசாதமாகப் படைக்கப்படுகிற து. இவ்வழிபாட்டில் நோன்பு கயிறு வைத் து வழிபடப்பட்டு இறுதியில் எல்லோர் கையிலும் அணிவிக்கப்படுகிறது. ஆண் கள், பெண்கள் என எல்லோரும் இவ்விரத முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.

🌹 ஒரு சிலர் இவ்விரதத்தை கடைசி ஒன்பது,ஏழு, ஐந்து, மூன்று நாட்களும், ஒரு சிலர் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கின்றனர். கோவில்க ளிலும், வீடுகளிலும் கேதார கௌரி வழிபாடு நடத்தப்படுகிறது.

🌹 இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நீண்ட நாட்கள் தம்பதியர் ஒற்றுமையாக வாழ்தல், நல்ல வாழ்கைத்துணை, சத்புத்திரர், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை கிடைக்கும்.  
  
🏵️ ரமா ஏகாதசி (21.10.2022)

🌹 ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்த 'ரமா ஏகாதசி' விரதத்தை ஒருவர் கடைபிடி ப்பதன் மூலம், 'இக' வாழ்வில் தனது அனைத்து பாவங்களையும் தொலைத்து மிகவும் உயர்ந்த 'பர' வாழ்வை அடைய முடியும், 

🏵️ தேவுதான  ஏகாதசி  (04.11.2022)

🌹 ஐப்பசி மாத வளர்பிறை தேவுதான  ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ ங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது

🏵️ ஐப்பசி மாதத்தை சிறப்பு செய்தவர்கள் 

🌹 இம்மாதத்தில் திருமூல நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், பூசலார் நாய னார், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாய ன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

🌹 பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத் தாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஜெயந்தி யும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

🌹 ஸகல ஐஸ்வர்யங்களையும் தரும் ஐப்ப சி மாத விரதமுறையை மேற்கொண்டு பண்டிகைகளைக் கொண்டாடி பரமாத்மா வின் அருளைப் பெறுவோம்.

நன்றி விஜயராகவன்

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.