இன்றைய ராசி பலன்கள் - (24-09-2025 புதன் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள் - (24-09-2025 புதன் கிழமை)

மேஷம்

யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது அவசியம். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷபம்.

பண தேவைகள் பூர்த்தியாகும். இனிமையான தகவல் ஒன்று காதில் விழும். அனுபவ அறிவை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுனம்.

புதிய முயற்சிகள் வெற்றியடையும். உணவு கட்டுப்பாடு அவசியம். பிரியமானவர்களிடம் விட்டுகொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்.

குடும்ப நபர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். எதிர்மறை எண்ணங்கள் மனதை விட்டு அகலும். உறவினர்கள் இடையே பகை விலகி பாசம் கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் உண்டு. வீடு, மனை வாங்கும் எண்ணம் வரும். விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கன்னி

தியானம் மன வலிமையை தரும். பழைய பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கும். நட்பால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம்

அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்

விருச்சிகம்.

குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். உபயோகமான பொருட்களை வாங்க முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு

குடும்பத்தில் வரவிற் கேற்ற செலவுகள் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகரம்

பிரபலங்களின் அறிமுகம் உற்சாகம் தரும். நண்பர்களிடம் இருந்த பகைமை மாறும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். புதிய தொழில் யோகம் அமையும்.

கும்பம்

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். உடல் நலம் சீராகும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்

நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உறவினர்களால் சில சங்கடங்கள் வரும். தூர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் அவசியம்.