என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே.. கமல்ஹாசன் அறிக்கை.
கருப்பு திரைப்படம் விமர்சனம்
சூர்யாவுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு கூஸ்பம்ப் படமாய் வந்திருக்கிறது இந்த கருப்பு.
தில், தூள், ரன் என இதுமாதிரி ஆக்சன் படம் பார்த்து உண்மையில் நாளாச்சு. கொடுத்த காசு ஒர்த் என சொல்லும் அளவுக்கு பரபரப்பான ஆக்சன் படமாக வந்திருக்கிறது இந்த கருப்பு. அதுவும் நாட்டார் தெய்வமான கருப்பசாமியின் பின்னணியில் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் அட்டகாசமா வந்திருக்கிறது.
சூர்யா என்றில்லை யார் நடித்தாலும் நல்ல திரைக்கதையுள்ள படங்களில் நடித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இது உதாரணம். சூரரை போற்று,ஜெய்பீம் படங்கள் நல்லா இருந்தாலும் அவை ஓடிடியில் ரிலீஸ் ஆனது தியேட்டரில் ரிலீஸ் ஆகல, அதனால தியேட்டரில் சூர்யாவுக்கு நல்ல படம் வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த காலங்களில் வந்த சூர்யாவின் பெரும்பாலான படங்கள் நல்லா இல்ல ஆனா அத அவங்க புரிஞ்சுக்கல, வீணாக வதந்தி பரப்புறதா நினைச்சாங்க, சரி போனது போகட்டும் இந்த படம் சூர்யாவுக்கு நல்லா வந்திருக்கு.
சென்னை பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்துல இறங்கும் ஒரு கேரள தந்தையும், அவரின் மகளும் ஆட்டோ பிடிப்பதற்காக இறங்குகையில் அவர்களின் 60 பவுன் நகையை கொள்ளையர்களிடம் பறிகொடுக்கின்றனர். தன் இளவயது மகளின் ஆபரேசன் சென்னையில் தான் செய்ய முடியும் என்ற நிலையில் சென்னைக்கு வருகையில் இப்படி நகையை பறிகொடுக்கின்றனர், போலீஸ் ஸ்டேசனில் அலைய விடுகின்றனர். ஒரு வழியா குற்றவாளியை கண்டுபிடித்து நகையை வாங்கும் அவர்கள் சிறிது நகையை எடுத்துக்கொண்டு இவ்வளவுதான் கிடைத்தது என கொடுக்கின்றனர், அதையும் கோர்ட்ல தான் போய் வாங்கணும் என இழுத்தடிக்கின்றனர்.
போலீஸ்காரர் மாறன் உதவியால் இந்த வக்கீலை போய் பாருங்க என அனுப்புகின்றனர். அந்த வக்கீல் தான் ஊழலில் ஊறிப்போன ஆர்.ஜே பாலாஜி, அவர் மட்டுமல்லாமல் அந்த கோர்ட்டில் வேலை பார்க்கும் ஜார்ஜ் மரியான், நீதிபதி நட்டி என்ற நட்ராஜ், கோடாங்கி வடிவேல் முருகன் என ஒட்டுமொத்த கோர்ட்டே ஊழலில் இருக்கிறது , யார் வந்தாலும் அவர்கள் வழக்கை தள்ளி போட்டு தள்ளி போட்டு இழுத்தடித்து மக்களை அலைக்கழிக்கின்றனர். ஊழலில் ஊறிப்போன ஆர்.ஜே பாலாஜியை வக்கீலாக அந்த கேரள குடும்பத்தினர் பிடிக்கின்றனர். ஆனால் நீதிபதி நட்ராஜ், ஆர்.ஜே பாலாஜி உதவியுடன் அந்த கேஸை தள்ளிபோட்டுக்கொண்டே போகிறார்.
ஈஸியாக ரெகவரி செய்த நகையை ஒப்படைக்க வேண்டிய கேஸ், வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் அந்த பெரியவரிடமும் அவர் மகளிடமும் இருக்கும் பணத்தில் அதை வாங்கு இதை வாங்கு என செலவுக்கு மேல் செலவழிக்கின்றனர். இதனால் மனம் வெம்பும் பெரியவர் கோர்ட் அருகே இருக்கும் வேட்டை கருப்பசாமி சக்தி வாய்ந்தது என்று அவருக்கு மிளகாய் அரைத்து பூசுகிறார், இதனால் வேட்டை கருப்பசாமியான சூர்யா அனல் தெறிக்க கண்களில் கனல் தெறிக்க வந்து கருப்பசாமியாக வந்து நீதித்துறையில் அநியாயம் செய்பவர்களை எல்லாம் களையெடுக்கிறார்.
அந்த கோர்ட்டில் ஒரே நியாயமான வக்கீல் த்ரிஷா, அவரும் கருப்பசாமியான சூர்யாவுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு உதவுகிறார். கருப்பசாமி என்றாலும் எல்லை தெய்வம் என்பதால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே சென்றால் அவருக்கு பவர் குறைந்து விடும் என்பதால் தான் சாமியையே எதிர்க்கிறோம் என்ற பயமில்லாமல் பல்வேறு சதிச்செயல்களை செய்கிறார் வில்லன் ஆர்.ஜே பாலாஜி. இறுதியில் அனைத்து தடைகளையும் உடைத்து கருப்பசாமி வெற்றி பெறுவதுதான் கதை.
படத்தில் சண்டைக்காட்சிகளை அனலாக அமைத்திருக்கிறார்கள் சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவ்.
நீதித்துறை எவ்வளவு மோசமாக இருக்கிறது, எவ்வளவு அப்பாவிகள் ஒரு நாளைக்கு அலைககழிக்கப்படுகிறார்கள், எல்லாவற்றிலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு நீதிபதி முதல் கோர்ட்டின் கடைநிலை ஊழியர் எவ்வளவு மோசமாக செயல்படுகின்றனர் என்பதை காட்டியிருக்கின்றனர்.
முதல் காட்சியில் இருந்து இடைவேளை வரை பரபரப்பாகவே போகிறது படம். படம் தொடங்கி அரைமணி நேரம் கழித்துதான் கருப்பசாமியாக மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் சூர்யா. காந்தாரா படம் பார்த்து கூஸ் பம்ப்ஸ் ஆனவர்கள் இறுதியில் கருப்பசாமியாக வந்து உக்கிரமாக மாறி நரை மீசையுடன் வாயில் சுருட்டுடன் கெட்டவர்களை சூர்யா அழிக்கும் அந்த காட்சி உண்மையில் மேனி சிலிர்த்து விடுகிறது. 18ம்படி கருப்பணசாமியை நேரில் பார்த்தது போல அற்புதமாய் படமாக்கி இருக்கிறார்கள். இப்படி க்ளைமாக்ஸ் மட்டுமல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் எதிரிகளை களையெடுக்கும் கருப்பசாமியின் அட்டகாசங்கள் தொடர்கிறது.
ஆர்.ஜே பாலாஜியின் வழக்கமான நக்கல் நையாண்டிகள் இருக்கிறது, இருந்தாலும் ஆர்.ஜே பாலாஜி கடைசிவரை வில்லன் வேடத்துல கலக்கி இருக்கிறார். நடுவில் நட்ராஜ் வில்லன் போல் வந்து போனாலும் முழு வில்லன் ஆர்.ஜே பாலாஜி. அவர் சில ரவுடி வக்கீல்களை உடன் வைத்துக்கொண்டு, நீதிபதியை கையில் வைத்துக்கொண்டு செய்யும் செய்லகள் எல்லாம் வில்லத்தனத்தின் உச்சம்.
திரை விமர்சகர் கோடாங்கி வடிவேல் முருகனுக்கு இந்த படத்தில் ஸ்கோர் செய்ய நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. வக்கீல்களை செயற்கையாக தூண்டி விட்டு போராட்டம் நடத்தும் வில்லன் ஆர்.ஜே பாலாஜி, அந்த போராட்டத்தில் இளையராஜாவின் போராடடா வாளேந்தடா பாடல் இடம்பெறுகிறது, அந்த இடத்தில் வக்கீல்கள் இந்த பாடலை பயன்படுத்தக்கூடாது என இளையராஜா வழக்கு தொடர்ந்தார் என்று செய்தி வருமாறு போட்டிருக்கிறார். உண்மையில் இளையராஜாவிடம் பெர்மிசன் கேட்டார்களா என தெரியவில்லை, அவர் பார்த்தால் என்னாகுறது.
சாய் அபயங்கரின் இசை ஒரு குத்துப்பாடலிலும் க்ளைமாக்ஸ் பாடலிலும் தெறிக்கிற்து. மற்றபடி சின்ன சின்ன இடங்களில் அவரின் பின்னணி இசை பிரமாதமாக இருந்திருக்க வேண்டும். வித்யாசாகர் என்றால் இன்னும் இது போல படங்களுக்கு கலக்கி இருப்பார்.ஒரே ஆங்கில பாடல்களாய் பின்னணியில் சேர்த்து பல மாஸ் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
இடைவேளைக்கு பிறகும் முன்பும் எந்த தொய்வும் இல்லாமல் படத்தை திரைக்கதை அமைத்திருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. சூர்யா முதல் காட்சி முதல் இறுதி காட்சிவரை சண்டைக்காட்சியில் அனல் தெறிக்க வருகிறார்.
உண்மையில் படம் தெறிக்க விட்ருக்காங்க இறுதிகாட்சி கருப்பசாமி சண்டைக்காட்சிகள் அபாரம் அட்டகாசம் என சொல்லலாம். திரும்ப திரும்ப நாம் பார்த்து உக்கிரமாகும் அளவு பதினெட்டாம்படி கருப்பு நமக்குள் வந்து போகிறார். தாராளமாக பார்க்கலாம் . சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து தாராளமாக பார்க்கலாம். கருப்பசாமியை பார்க்கும்போது உள்ளமும் உடம்பும் சிலிர்க்கும் அந்த அளவு கருப்பசாமியாக வாழ்ந்துள்ளார் சூர்யா.
அந்த கேரள பெரியவர், அவரின் மகள் பெயரும் தெரியவில்லை. இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்பு கண்கலங்க வைக்கும் நடிப்பு.
செமயா வந்திருக்கு படம் ஆக்சன் பட விரும்பிகளுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான படம். சூர்யா பல வருடம் கழித்து வெற்றிக்கோட்டை தொட்டபடம்
ப்ளுசட்டை மாறன் , சிலரின் தேவையற்ற எதிர்மறை விமர்சனங்களை பார்த்து குழப்பமடையாதீர்கள் படம் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. நானே இதுபோல மாஸ் படத்தை பார்த்து நாளாச்சு.