வளையல்களுக்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள்?
சிகப்பு, பச்சை நிற கண்ணாடி வளையல்களை பெண்கள் அணிந்தால் தீய சக்திகளிடமிருந்து பெண்களை காக்க உதவும்.
பச்சை நிறம், தேவியின் தத்துவம்; பச்சை நிறக் கண்ணாடியில் அது அதிகம் உள்ளது. வளையலில் உள்ள சாத்வீகத் தன்மையும் தேவி தத்துவமும் சைதன்யமும் சேர்ந்து மணிக்கட்டிலும் விரல்களிலும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, தீய சக்திகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுகின்றன. வளையலின் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது. மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத்திறத்தைக் குறிக்கிறது.
சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக் கூடிய சக்தியும் கொண்டது. சிவப்பு கண்ணாடி வளையலும் அவ்வாறே தீயனவற்றை அழித்து, நல்ல சக்திகளை கிரகிக்கக் கூடியது. சில ஜிகினா வேலைப்பாடுகள் உள்ள பச்சை, சிவப்புநிற வளையல்களில் தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளது. கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது. ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது.