அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா! இடைத்தேர்தலுக்கு ரெடியாகும்...
ஜூலை மாதம் 2026 - கும்பம் ராசி பலன்கள்
இந்த ஜூலை மாதம் மாத பிற்பாதி சூரியன் 5'ம் இடத்தில் இருந்து 6'ம் இடத்துக்கு செல்வதால் காரிய தடைகள் விலகும் அந்தஸ்து கௌரவம் அரசு செல்வாக்கு கூடும் நினைத்த காரியம் நிறைவேறும் பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
செவ்வாய் 4-ம் இடத்தில் பலவீனப்படுகிறார் இதனால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.
சுக்கிரன் 6-மற்றும் 7ம் இடங்களில் பலவீனப்படுகிறார் இதனால் பெண்களால் அவமானங்கள் அவப்பெயர் வரக்கூடும் பழைய வாகனங்கள் தண்ட செலவு வைக்கும் கவனம்.
புதன் ஜூலை 6-ம் தேதி வரை 6-ம் இடத்தில் நற்பலன்களை வழங்குவார். பிறகு வக்ரகதியாக 5-ம் இடத்துக்கு பின்னோக்கி சென்று மனக்குழப்பங்களை ஏற்படுத்துவார் கவனம்.
2'ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பண சேமிப்புகள் கரையும் சூழல் உண்டாகும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று.
6-'ம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
ராசிக்குள் ராகு இருப்பதால் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் முன் யோசனையின்றி எந்த செயலும் செய்யாதீர்.
7'ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிரிகள் தொல்லை அதிக அளவில் இருக்கும் தொழில் போட்டிகள் காணப்படும்.
ஜூலை 19,20, 21, சந்திராஷ்டமம்
பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் ராகுகால வேளையில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.