இன்றைய ராசி பலன்கள் 29.06.2026 திங்கள் கிழமை
மேஷம்
முக்கிய விஷயங்களுக்கு மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். இழுப்பறியில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். மனக்குழப்பம் காணப்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும்.
சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.
மிதுனம்
குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டி வரும். புதிய முயற்சிகளில் இருந்த தடை விலகும் .கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கடகம்
விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
சிம்மம்
குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பணப்பிரச்னை ஒரு புறம் மனதை உறுத்தும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.
கன்னி
சுற்று வட்டாரத்தில் கவனமாக இருக்கவும். பிரியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்
துலாம்
குடும்ப ஒற்றுமை பலப்படும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
விருச்சிகம்
விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம், பிரபலங்களின் தொடர்பு கிட்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு
குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. வாகன செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகரம்
எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் . வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கும்பம்
குடும்ப பெருமையை உயர்த்த முடியும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
மீனம்
குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். தேவை இல்லாத சிந்தனைகளால் மனக்குழப்பம் வரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.