வடகிழக்கு திசை வளமான வாழ்வளிக்குமா?
பூமியிடம் இரண்டு பெரிய சக்திகள் உள்ளன. ஒன்று சூரிய ஒளியை உணவாக மாற்றக்கூடிய சக்தி; மற்றொன்று காந்தபுலம் என்னும் இழுவிசை. காந்தபுலம் பூமியின் வடதுருவத்தில் ஆரம்பித்து தென்துருவத்தில் முடிகிறது. ஆக, வடதிசை நோக்கிய வீடு என்பது பூமியின் காந்த சக்தியைப் பெறும் அமைப்பாகும். இப்படிப்பட்ட சிறப்புமிக்க வடக்கு நோக்கிய கட்டிட அமைப்பினை காண்போம்.
வடகிழக்கு திசை தாழ்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு வடபுறம் உள்ள அமைப்புகளை பூமியின் இயல்பிற்கு ஏற்றவாறு தாழ்வாக அமைக்கும்போது, அந்தக் கட்டிடம், கூடுதல் பலமும், இயற்கையோடு இணைந்து செயல்படும் தன்மையையும் கொண்டிருக்கும். வீட்டின் முகப்பில் போர்ட்டிகோ அமைப்போம். அதை ஒட்டி வீட்டினுள் செல்ல வெராண்டா, புகுமுக மண்டபம், சிறு அறை, பிறகு ஹால் என்று அமைப்போம். இவை மொத்த வீட்டில் தாழ்வாக இருப்பது சிறப்பாகும்.
இங்கே கவனிக்க வேண்டியவை பில்லர்கள். இவை ஈசான்யத்தில் அமையாமல் வடக்கு, கிழக்கு ஈசான்யங்களை விடுத்து சற்று தள்ளி அமைகின்றன. இந்த பில்லர்கள் வீட்டிற்கு வடக்கு/கிழக்கில் வெளியே 4 அடி வரை போர்ட்டிகோவை நீட்டி அமைக்கவும். வடக்கு/கிழக்கு எல்லையிலேயே அமைப்பதும், ஈசான்ய மூலையில் பில்லர்கள் இருப்பதும் நம் இரண்டாம் சந்ததிக்கு கெடுதல்கள் ஏற்படுத்தும்.
வீட்டினுள் செல்ல சாலை மட்டத்திலிருந்து 3 படிக்கட்டுக்கள் வருமாறு அமைப்பது சிறப்பை தரும். 57 படிக்கட்டு அமைப்பது வியாபார நிறுவனங்களுக்கு நன்றாக இருக்கும். மூன்று படிகளும் சேர்த்து மொத்தம் 1லு அடி உயரத்தில் அமைவது நல்லது. அறைகளின் சீலிங்கைவிட போர்ட்டிகோ சீலிங் 1லு அடி குறைவாக இருக்கும். இதையே மேல் தளங்களிலும் கடைப்பிடிக்கலாம்.
வடக்கு ஈசான்யத்தில் கிழக்கு சுவரை ஒட்டி வு அடி விட்டு பிரதான வாசல் படியை அமைக்க வேண்டும்.
சிலர் சூரியன் முதல் சனி முடிய 7 கிரகங்களை வரிசைப்படுத்தி புதன், சுக்கிரன், குரு பகுதியில் வைக்கலாம் என கூறி வருகின்றனர். இது வடக்கு, கிழக்கு திசை மனைகளுக்கு மட்டுமே ஓரளவு பொருந்தும். ஆனால், தெற்கு, மேற்கு திசை மனைகளுக்கு மிகவும் கெடுபலனை அளிப்பவையாக அமைத்து விடும். சிலர் தத்தமது ராசிக்கு ஏற்ப உள்ள திசையில் வாசல்படி அமைத்துக் கொள்ள விரும்புவார்கள். ராசிகள் 12, திசைகள் 4 மட்டுமே. எப்படி 12 ராசிக்காரர்களை 4 திசைக்குள் அடக்குவது? அந்த கேள்விக்கு சாஸ்திரத்தில் விடை இல்லை.
வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் 4 திசைகளிலும் வாசற்படி அமைக்க முடியுமா? அப்படிப் பார்த்தால் வீட்டுச் சொந்தக்காரருக்கு உரிய திசையில் வாசற்படி அமைக்கும்போது அது மற்றவர்களுக்கு பலனை கொடுக்காமல் போய்விடலாமே! ஏற்கனவே உள்ளவர்களின் ராசியில்லாமல் வேறு ராசியில் பேரக் குழந்தை பிறந்தால், பிறந்த பிறகு சுவரை இடித்து புதிய வாசற்படி வைக்க முடியுமா என்ன?
ஆக, வடக்கு மனை வீட்டிற்கு வடக்கிலேயே வடக்கு ஈசான்யத்தில் பிரதான வாயிற்படியை அமைக்க வேண்டும். கல்யாண மண்டபம், தொழிற்சாலை போன்றவற்றுக்கு மையத்தில் அமைப்பதில் தவறில்லை. ஈசான்யம் என்பது அனைத்து சக்தி பிரவாகமும் உள்ள பகுதி இப்பகுதியிலிருந்து தான் வீட்டின் மற்ற பகுதிகளுக்கு சக்தி உள்செல்கிறது. எனவே, ஈசான்யத்தில் கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதிலிருந்தே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாரமில்லாமலும், வெட்டு படாமலும், அடைக்காமலும், திறந்த வெளியாகவும், சூரிய வெளிச்சம் நன்கு உள்வரும் வகையிலும் வடக்கு/கிழக்கு ஈசான்யத்தில் பெரிய வாயிற்படி, ஜன்னல்களை அமைக்க வேண்டும்.
ஈசான்ய வெட்டு பெரும்பாலான மக்கள் ஈசான்யம் காலியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஈசான்யத்தை வெட்டி மேலே படத்தில் உள்ளவாறு அமைக்கின்றனர். வாகன நிறுத்துமிடம் அல்லது வேறு காரணங்களைக் காட்டி பொறியாளர்கள் பலரே இப்படி அமைத்து அவஸ்தைபட்டு வருவதைக் காண்கிறோம். ஈசான்ய வெட்டு உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் வாழ்வில் வீழ்ச்சி ஏற்பட்டும், வாரிசு இல்லாத சூழ்நிலையும் உருவாகும். அறிவு, ஆற்றல் இருந்தும் தோல்விகளை அடிக்கடி எதிர்கொள்வர். படிப்பில் தோல்வி, வேலை பறிபோகும் நிலை, குடும்ப உறவுகளில் விரிசல் என பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கும்.
வாஸ்து விஞ்ஞானத்தில் ஈசான்யம் என்பது வாஸ்துவின் தலைப் பகுதியாகும். தலையை வெட்டிய பின் உயிர் இருக்குமா? எனவே, மேற்சொன்ன கெடுபலன்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
உதாரணமாக, ஸ்ரீலங்காவை எடுத்துக் கொண்டால் ஏறக்குறைய சுரைக்காய் போல முக்கோணமாக இருக்கிறது. கிழக்கு ஈசான்யம் வெட்டு பட்டு முக்கோணமாக இருக்கிறது. இப்படி வெட்டுபட்டதால் இனப்படுகொலை ஏற்பட்டதும், அண்டை நாடுகளுடன் சுமுகமாக நட்பு பாராட்ட முடியாத நிலை இருக்கிறது.
எனவே, வடக்கு மனை வீட்டில் ஈசான்யத்தில் பில்லர்களை அமைக்காமல் சற்று தள்ளி அமைத்து ஈசான்ய வெட்டு இல்லாமல் வெராண்டா உடன் கூடிய அல்லது நேரடியாக ஹாலை அமைப்பது மட்டுமே முழு வாஸ்து அமைப்பு ஆகும். ஆனால், சில பரிகாரங்கள் மூலமாக இந்த வாஸ்து தோஷத்தைப் போக்கிக்கொள்ளலாம். வாஸ்து குற்றம், மனை குற்றம் மற்றும் செயல் குற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கட்டிடம் நமக்கு நல்ல பலன் அளிக்க, செவ்வாய்க் கிழமையன்றோ அல்லது மிருகசீரிசம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களிலோ அல்லது 9, 18, 21 ஆகிய ஆங்கில தேதிகளிலோ ஏதேனும் ஒரு நாளில், அருகில், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காயை நைவேத்யம் செய்து ஜபம் செய்து வந்தால் நல்ல மாற்றம் ஏற்பட்டு அந்த வீடு மூலம் நற்பலனை பெறலாம்.
வாஸ்து மந்திரம்
ஓம் பிருத்வி மூலதேவாய வித்மஹே
பூலோக நாதாய தீமஹி
தந்தோ வாஸ்து ஈஸ்வரப் ப்ரசோதயாத்
(9 முறை சொல்லவும்)
மானதண்டம் காரப் ஜேன
வஹந்தம் பூமிசோதகம்
வந்தேஹம் வாஸ்து புருஷம்
ஸயானம் ஸயனே சுபே
(9 முறை சொல்லவும்)