இன்றைய ராசி பலன்கள் 30.06.2026 செவ்வாய் கிழமை
மேஷம்
சொந்த பந்தங்கள் ஆதரிப்பர். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க வேண்டிவரும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்விர்கள் .தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
ரிஷபம்
குடும்பத்தில் சில சிரமங்களுக்கு பின் நன்மை உண்டாகும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மிதுனம்
குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
கடகம்
பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டிவரும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். நெருங்கிய உறவினர்கள் பக்கபலமாக உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். நட்பு வழியில் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கன்னி
வரும் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற முடியும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். பிரியமானவர்கள் வழியில் பிணக்குகள் வரும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
விருச்சிகம்
யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, யாரிடத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். நண்பர்கள் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
மகரம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம்
குடும்ப சுமை குறையும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். அடுத்தவரிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். பெற்றோர்கள் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.