மார்ச் 2026 மாத ராசி பலன் - கும்பம்

march-2026-rasi-palan-kumbam
மார்ச் 2026 மாத ராசி பலன் - கும்பம்

சுக்கிரன் பலம் பெற்று ஒன்று மற்றும் இரண்டாம் இடங்களில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் சிலருக்கு சொந்த வீடு கனவும் நனவாகும் உறவினர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.

5-ம் ஸ்தானமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

இரண்டாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தவும்.

ராசிக்குள் ராகுவும் 7-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் தடுமாற்றம் ஏற்படும் மன குழப்பங்கள் உண்டாகும் தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள் குடும்ப உறவுகளிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

இம்மாதம் சூரியனும் பலவீனமாக காணப்படுவதால் சொத்துக்கள் வாங்கும் பொழுது கவனம் செலுத்தவும் தந்தை மகனுக்குள் வீண் விவாதங்கள் தவிர்க்கவும்
ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் அதிக அளவில் காணப்படும் அவசர முடிவுகளால் சில இழப்புகள் நேரிடும் கவனம் இம்மாதம் புதனும் ராசிக்குள் பலவீனப்படுவதால் ஞாபக மறதிகள் அதிகமாக காணப்படும் கூட்டு தொழில் செய்பவர்கள் கவனத்துடன் இருக்கவும் சோம்பல் அதிகரிக்கும் சுறுசுறுப்பின்மை காணப்படும்.

மார்ச் 5,6, சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் வாரஹி அம்மன் வழிபாடு செய்து வரவும்
எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.