இளம் வயது காதலை மிஞ்சும் நடுத்தர வயது காதல் கதை!
Film:Second chance
Director:Ozan Denzing
Language:Turkish
Year:2016
Duration:1:36
இந்தப் படத்தின் கதைக்குப் போவதற்கு முன்பு,ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் காதலைப் பற்றி எழுதிய சில வரிகளைப் பார்ப்போம்.
"காதல் வயது தொடர்புடையதல்ல;ஆன்மாவுடன் தொடர்புடையது;காதல் வாழ்வின் ஓர் அங்கமல்ல;காதலே வாழ்வின் முழுமை.நிராகரிப்பின் உச்சத்திலும், அவமானத்தின் கீழ்மையிலும் கூட காதலின் புனிதத்தைக் காக்க முடியும்."
Spoiler alert:அவள்((Yasemin)கணித ஆசிரியை.கணவன் இளம்பெண் ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால், அவனை விட்டு பிரிந்து வாழ்பவள்.ஒரே மகள்,வயது 16.
அவன்(Cemel)பெரிய Reataurant ஒன்றின் முதலாளி.முதல்திருமணத்தால் ஏமாற்றப்பட்டவன்.ஒரே மகன்(மகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன்)
முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையென்றால், 'second chance',ஒன்று அமைவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லும் திரைப்படம்.
மிக இளமையான காதல் படத்தில் கூட இப்படியெல்லாம் காட்சிகளைப் பார்த்து நாம் ரசித்திருக்க முடியாது.காட்சிகள் அமைந்தால் போதுமா?அந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் முக்கியம் அல்லவா?
கதைப்படி அவளுக்கு 40.அவனுக்கு 44.
பொதுவாக,பெண்கள் 40 வயதிற்கு பிறகுதான் மிக அழகாக தோன்றுகிறார்கள்.அப்படித்தான் இருக்கிறாள், இந்த கணித ஆசிரியையும்.
அன்பு,பாசம்,காதல்,கோபம்,ஏமாற்றம்,
ஏக்கம்,பரிதவிப்பு ஆகிய அனைத்து உணர்வுகளையும் மிக அழகாக காண்பிக்கக் கூடிய மிகச்சிறந்த நடிகையாக இருக்கிறார்.
Hero-வின் நடிப்பும் Excellent.இவர் நடித்த 'You are my home' என்ற படமும் மிகச் சிறந்த படம்தான்.
உடல்மொழியின் மூலமாக தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்துகிறார்.
முதன்முதலில், அவளுடன் அவன் லேசாக drinks அடித்துக் கொண்டே பேசும் அந்தக் காட்சியை நம்மால் எப்பொழுதும் மறக்கவே முடியாது.
இந்தக் காட்சிக்கு முன்னால், அவர்கள் இருவருக்கும் அறிமுகமாகும் காட்சிகள் மிகுந்த சுவாரஸ்யமானவை.
Video chating மூலமாக அவர்கள் இருவருக்கும் ஏற்படும் mis-understanding,அதனால் அவளுக்கு அவன் மீது ஏற்படும் கோபம், பின்பு உண்மை தெரிந்து, மனத்தெளிவு கொண்ட பிறகு ஏற்படும் நட்பு,சிநேகம்,காதல் என்று ஜெட் வேகத்தில் செல்லும் திரைக்கதையில் நாம் படத்தோடு ஒன்றிப் போகிறோம்.
விட்ட காட்சிக்கே மறுபடியும் போவோம்.அதுவும் drinks அடிக்கிற காட்சியை விட முடியுமா?
இந்த drinks அடிக்கற வைபோகமிருக்கே, மிகுந்த ரசனைக்குரிய ஒன்று.எல்லோராலாயும் அனுபவித்து அடித்து விட முடியாது.
நம்மூர் பக்கமெலாம் ஒரே கல்ப்தான், ஊறுகாயை தொட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருப்பானுங்க.அது போதைக்கு மட்டுமே குடிக்கிற அன்பர்கள்.
மிதமான குடியில் மனம் விட்டு பேசுவதற்கு, நமக்கு ஆத்மார்த்தமான நட்பு வேண்டும்.அந்த நட்பு கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
அவளை,அவன் தன்னுடைய Reataurantக்கு அழைக்கிறான்.அவன் மீது அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டப்பிறகு அவன் கூட்பிட்டவுடனேயே வருகிறாள்.
அவள் வந்தவுடன், அவனுடைய சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே!
இரண்டு கைகளையும் தேய்த்து கொள்கிறான்.அவளை நாற்காலியில் உட்காரவைக்கிறான்.அவளுடைய கோட்டை பாந்தமாக கழட்டுகிறான்.மிகுந்த குதூகலமான மனநிலைக்கு ஆளாகிறான்.
"Drinks அடிக்கலாமா",என்கிறான் அவன்.அவள்,"Just small peg",என்கிறாள்.
அவன் அவளுடைய கிளாஸில் பாந்தமாக மெதுவாக ஊற்றுகிறான்.
எதிரெதிரே உட்கார்ந்து மனம் விட்டு பேசுகிறார்கள்.கடந்த கால திருமண உறவு, ஏமாற்றங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.இந்தக் காட்சியை subtileக்காக ஒரு முறையும்,அவர்களுடைய நடிப்பின் அழகியலுக்காவும் ஒரு முறை பார்த்தேயாக வேண்டும்.Superb scene.
இரவில் நடந்து வரும்பொழுது, லேசான போதையில், அவள் அவனுடைய நெஞ்சின் மீது லேசாக முகத்தைப் புதைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் காட்சியை அழகான கவிதையில் சேர்க்கலாம்.
அவளை,அவன் அவளுடைய வீட்டில் இறக்கி விடுகிறான்.வீட்டின் படியேறிச் சென்று, வீட்டின் வாசலில் நின்று இவனை திரும்பிப் பார்த்து சிரிப்பதும்,இவன் பதிலுக்கு smile பண்ணுவதும் அழகோ அழகு.
அப்பொழுது,அவன் நடந்து செல்லும் பொழுது தனக்கு ஒருத்தி கிடைத்து விட்டாள்(second chance)என்ற சந்தோஷத்தை அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய உடல்மொழியால் வெளிப்படுத்துவான்.
ஊடல் வராத காதல், ஒரு காதலா?
பிரிந்திருக்கும் பொழுதுதான், நாம எப்படா மீண்டும் சந்திப்போம் என்ற ஏக்கப் பெருமூச்சு வெடித்து எழும்.
அவன் மீது அவளுக்கு ஏற்பட்ட தவறான புரிதலால் அவனை மீண்டும் சந்திப்பதை தவிர்க்கிறாள்.அவன் தவித்துப் போகிறான்.
Already இவர்கள் இருவருடைய காதலையும் அவளின் மகள் அறிந்திருக்கிறாள்.மகளின் மூலமாக அவள் பார்ட்டியில் இருப்பதை அறிந்து கொண்டு அங்கு செல்கிறான்.
பார்ட்டியில் அவள் மட்டும் தனியாக.தன்னைத் தவிர மற்ற எல்லோரும் ஜோடியாக சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கிறாள்.
அப்பொழுது பாடல் ஒன்று ஒலிக்கும்.நம் மனதை கிறங்கடிக்கும் பாடலது.மொழி தெரியாது;பாடல் வரி தெரியாது;அர்த்தம் தெரியாது;அங்கு ஒலிக்கும் அந்தப் பாடலானது நம் மனதை கொள்ளை கொண்டு விடும்.
உலகப்புகழ்ப்பெற்ற கவிஞன், William Wordsworth, 'Solitary reaper',என்ற பாடல் ஒன்றை எழுதியிருப்பார்.இப்பாடலை 10ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில் படித்திருப்போம்.
'வயலில் கதிர் அறுத்துக்கொண்டே அவள் பாடும் பாட்டின் பொருள் தெரியலே, அந்தப் பாடலின் இனிமை மட்டும் எனை என்னவோ செய்தது என்ற உணர்வில் எழுதியிருப்பார்,கவிஞர்.
அப்படித்தான்,மேலே சொன்ன அந்தப்பாடல் காட்சியைப் பார்த்த போதும் உணர்ந்தேன்.
Base voiceலே நம் அடிமனசை பிசைகிற குரல் அது.
அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வரிகள், அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் என்று நினைக்கிறேன்.
நீண்ட நாட்கள் கழித்து இருவரும் மிக அருகில் நிற்கிறார்கள்.பாடல் உச்சக்குரலில் ஒலிக்கிறது.தங்களுடைய பிரிவையும் ,ஏக்கத்தையும் இதழோடு இதழ் ஆழப்பதித்து தீர்த்துக்கொள்கிறார்கள்.இதுவும் மிகச்சிறந்த காட்சியாகும்.
இப்போ,சேர்ந்துட்டாங்க படம் அவ்வளவுதானா,அதுதான் இல்லை.காதலில் மூழ்கும் பொழுது பிரச்னை வராமல் இருக்குமா?இது எதுவும் வராமல் இருந்தால் அதற்குப் பெயர் காதலா?
முன்பு,தவறான புரிதலால் பிரிந்தார்கள்.இப்போ, குடும்பத்தில் வந்த பிரச்னையினால்.இப்போ திரைக்தைதான் பிரச்சைனையின் வடிவில் வந்து அவர்கள் இருவரும் ஒன்றிணைவதை தடுக்கும்.
Superb climax.
தந்தை,இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டபிறகு, தன்னை கவனிப்பதில்லை என்பதை உணர்ந்து மகன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
க்ளைமாக்ஸுக்கு முன்பு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள வசனங்களும் காட்சிகளும் நம் மனதை உருக வைத்துவிடும்.
தன் அம்மாவின் காதல் உணர்வுகளை மகள் பார்த்து பரவசப்படும் காட்சிகள் அனைத்தும் கொள்ளையழகு.
'Second chance ',எல்லோருக்கும் வாய்க்காது.அப்படி வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
அந்த வகையில் இந்த ஹீரோவும், ஹீரோயினும் அதிர்ஷ்டசாலிகள்தான்.
சே மணிசேகரன்
மீள்பதிவு