பிரபுதேவா கட்டிப்பிடித்து காதை கடித்துவிட்டார்.. பிரபல நடிகை அதிர்ச்சி

actor-prabudeva-actress-senthil-kumari
பிரபுதேவா கட்டிப்பிடித்து காதை கடித்துவிட்டார்.. பிரபல நடிகை அதிர்ச்சி

பிரபுதேவா நடன இயக்குநராக, நடிகராக, இயக்குநராக புகழ் பெற்றவர். இப்போது நடிகராக மட்டும் இருக்கும் அவர்; கடைசியாக தமிழில் அவர் ஜாலியோ ஜிம்கானா படத்தில் நடித்தார். அடுத்ததாக மூன்வாக், பேங் பேங் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் குறித்து பிரபல நடிகை செந்தில்குமரி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

பிரபுதேவா என்றாலே அவரது ரப்பர் போன்ற உடலும், அசர வைக்கும் அசுரத்தனமான நடனமும்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். 'எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்தது ரப்பர் போல சொன்னபடி துள்ளுது பார்' என்று மிஸ்டர் ரோமியோ படத்தின் பாடலில் வாலி ஒரு வரி எழுதியிருப்பார். பிரபுதேவாவின் நடனத்தை பார்க்கையில் உண்மையில் அவரது உடலில் எலும்புக்கு பதில் ரப்பர்தான் இருக்கிறதோ என்ற சந்தேகமே அனைவருக்கும் வரும். அந்த அளவுக்கு உடலை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் வளைத்து ஆடக்கூடியவர்.

நடிப்பிலும் கிங்தான்: நடனத்தில் பட்டையை கிளப்பியது போன்றே நடிப்பிலும் அட்டகாசப்படுத்தினார். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்த அவர் 90களில் மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற பெயரையும் வைத்திருந்தார். அவரது எக்ஸ்பிரெஷன்களும் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் காதல் கொண்டேன், சொல்லாமலே உள்ளிட்ட படங்கள் எல்லாம் முதலில் அவரிடம்தான் சென்றன. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல இயக்குநர்களுக்கு முதல் ஆப்ஷன் ஹீரோவாக அவர் இருந்தார்.

இயக்கத்திலும் வென்ற பிரபுதேவா: நடிப்பு, நடனத்தில் எப்படி கோலோச்சினாரோ அப்படி இயக்கத்திலும் கெத்து காண்பித்தார். சித்தார்த், விஜய், சல்மான் கான் என பல நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி மெகா ஹிட்டை கொடுத்த இயக்குநர் அவர். இதற்கிடையே ரமலத் என்பவரை திருமணம் செய்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டு பிரிந்த அவர்; நயன்தாராவை காதலித்து பிரேக் அப் செய்தார். அதனையடுத்து இன்னொரு பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

மீண்டும் நடிக்க வந்த பிரபுதேவா: இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. எனவே நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக பேங் பேங், மூன் வாக் ஆகிய படங்கள் வருகின்றன. மேலும் மீண்டும் படம் இயக்குவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.

நடிகை சொன்னது: இந்நிலையில் பிரபல களவாணி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல குணசித்திர நடிகை செந்தில்குமரி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சார்லி சாப்ளின் திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடித்தேன். அப்படத்தில் எனக்கு காது கேட்காத ரோல் கொடுத்திருந்தார்கள். அதில், ஃபைல் எங்கே என்று என்னிடம் அவர் கேட்பார். உடனே நானோ மயில் இங்கே எங்கே இருக்கிறது என்று கேட்பேன்.

அவர் என்னிடம் முன்கூட்டியே சொல்லாமலே, என்னை கட்டிப்பிடித்து காதை கடித்துவிட்டார். நான் ஆ என கத்திவிட்டேன். ஏன் சார் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு, 'சொல்லாமல் அப்படி செய்ததால்தான் நீ அப்படி கத்தினாய். அந்த சீன் நன்றாக வந்தது. இல்லையென்றால் இந்த குரல் கேட்டிருக்காது' என சொன்னார். அந்தக் காமெடி நன்றாக வந்தது" என்றார்.