பூக்களைக் கொண்டு தீபத்தைக் குளிர வைக்கலாமா?

vilakku-deepam-poojai
பூக்களைக் கொண்டு தீபத்தைக் குளிர வைக்கலாமா?

தீபத்திலிருந்து ஒளி மட்டுமல்ல, இறை சாந்நித்தியமான சக்தியும் வெளிப்படும். அது அந்த வீட்டில் உள்ள சகல வஸ்துக்களையும் சென்றடையும். அப்படியான தீபம் பரிசுத்த மாக இருப்பது அவசியம் அல்லவா?

ஆகவே, தினமும் புதுத் திரி, புது எண்ணெய் சேர்க்கும் விதம் விளக்கேற்றுவது மிகவும் சிறப்பாகும்.

விளக்குகளில் எண்ணெய் மீதமாகிவிட்டது எனில், அந்த எண்ணெய் தூசி, பூச்சுகள் அண்டாமல் சுத்தமாக இருக்கிறது என மனதுக்குத் தோன்றினால், அதிலேயே மேலும் எண்ணெய் சேர்த்து தீபம் ஏற்றலாம்; தவறில்லை. எண்ணெய் மீதமாகாமல் தீர்ந்து போகும் வரை தீபம் சுடர்விடுவது நல்லதே. இல்லையெனில், திருவிளக்கில் குறிப்பிட்ட அளவு எண்ணெய் சேர்ப்பதை வழக்க மாக்கிக்கொள்ளலாம்.

இதனால், விளக்கில் எண்ணெய் மீதமாவது தவிர்க்கப்படும். ஒவ்வொருமுறையும் புதிதாக எண்ணெய் சேர்க்கும் போது, நமக்கும் திருப்தி உண்டாகும் அல்லவா!