மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை?

maargazhi-maatha-palangal
மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை?

'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என ஶ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார்.

மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும். (பீடு=பெருமை)
இம் மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.

ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர்.
தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும்.
அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம்.

எனவே மார்கழி என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது.

மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு உகந்தது.

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத் 'தனுர் மாதம்" எனவும் அழைப்பர்.

இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது மக்களின் வழக்கம்.

ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது.

எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப் பக்தர்கள் இம்மாதத்தில் மேற்கொள்ளுகின்றனர்.

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் 'என்றும் பதினாறு வயது' எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற மார்க்கண்டேயர் பிறந்தார்.

எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது.

மிருத்யுஞ்ச ஹோமம்( யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஆருத்ரா தரிசனம்!!

சிவபெருமானின் "ஆருத்ரா தரிசனம்" மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவானது
ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் அகானிவடிவாக நின்ற நாள் என்பதால் திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்தகரமாகிறது;"ஆதிரையான்" என்று சிவனை அழைப்பர்.

இவ்விழாவைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப் படைக்கப்படுகின்றன.

'திருவாதிரைக்கு ஒருவாய் களி' என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.

அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

இவ்விரத வழிபாடு மேற்கோள்வோர், நடனகலையில் சிறக்கலாம்.


வைகுண்ட ஏகாதசி!!

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.

திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும்.

இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.

வைகுண்ட ஏகாதசி அன்று திருமாலுக்குப் பிரியமான துளசி தீர்த்தத்தை மட்டுமே உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தைதா தரும்.

இந்நாளில் வைகுண்டத்தின் வாசல் திறந்தேயிருக்கும் என்றும், அன்று மரணிக்கின்ற உயிர்கள், நேரே வைகுண்டத்திற்குச் செல்லும்! என்பதும் ஐதீகம்.

பாவை நோன்பு. !!

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர்.

பெண்கள் கடைப்பிடித்த விரதமானதால் இவ்விரதம், பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.

பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள், பாவை நோன்பினை மேற்கொண்டு, அரங்கனை கணவனாக அடைந்தாள்.

ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.