போகர் அருளிய விஷக்கடி வைத்தியம்!

bogar-siddhar-visakkadi-vaithiyam
போகர் அருளிய விஷக்கடி வைத்தியம்!

பாம்புகள், தேள், விஷ வண்டுகள் போன்றவை கடித்தால் அதற்கான வைத்திய முறைகளை போகர் தனது "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் மூன்று பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

பாடல்கள்
"பாரப்பா புகையிலயு மயிலிரகினொடு
பண்பான வெள்ளெருக்கன் வேருங்கூடி
சீரப்பா சுருட்டிபுகை குடித்தாயானாற்
சிறப்பான கொட்டுவிஷ்ந் தீருந்தீரும்
சாரப்பா வுப்பதனைப் பொடித்துவைத்துச்
சார்வான பூரமது கொளுத்திவைத்து
நேரப்பா கண்சிரட்டைக் கொண்டுமூடி
நிலையாகக் கடித்தவிடங் கட்டப்போமே."
"போமென்ற குரும்பியையுந் தடவிக்கட்டப்
பொல்லாத கொட்டுவிஷம் போகும்போகும்
நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால்
நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும்
வாமென்ற சடைச்சிவே ரரைத்துத்தின்ன
வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்
ஆமென்ற சீந்திற்றண்டின் பாலையுண்ண
வறியாத விஷங்களெல்லாம் வாங்கும்பாரே."
"பாரென்ற வேலியதன் சாற்றையுண்ணப்
பதினெட்டு எலிவிஷமும் பரக்கும்பாரு."

இதன் விளக்கம்
புகையிலையுடன் மயிலிறகின் நடுவில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவைகளைச் சேர்த்து சுருட்டி புகை குடிக்க விஷங்கள் நீங்கும்.

விஷக்கடி வாயில் உப்பை பொடியாக இடித்து வைத்து அதன் மேல் பூரத்தை சூடாக்கி வைத்து மூன்று கண்ணுடைய தேங்காய் சிரட்டையால் மூடி அதனை கட்டிவைத்துவிட விஷம் நீங்கும்.

விஷக்கடி வாயில் குரும்பியை தடவி துணியால் கட்டிவைக்க விஷம் நீங்கும்.

சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்து தின்றாலும், சீந்தில் தண்டில் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்கும்.

கொடிவேலிச் சாற்றை உண்ண பதினெட்டு வகை எலிவிஷங்கள் நீங்கும் என்கிறார் போகர்.